Mittwoch, 16. Dezember 2009

பிரபாகரன் படத்தை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை: டி.ஜி.பி.ஜெயின்!


பிரபாகரன் படத்தை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை: டி.ஜி.பி.ஜெயின்!




”விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்தியோர் மீது

நடவடிக்கை எடுக்கப்படுகிறது.”என்று தமிழக டி.ஜி.பி ஜெயின் தெரிவித்தார்.



இதுகுறித்து அவர் மேலும் கூறியது…” தமிழ்நாட்டில் மாவீரர் நாள்

பொதுக்கூட்டங்கள் நடத்த மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

மாவீரர்நாளையொட்டி பிரபாகரன் படத்துடன் பேனர்கள் வைக்க அனுமதி இல்லை.



மீறி வைத்தவர்கள்மீதுநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரபாகரன்

படங்களும் அப்புறப்படுத்தப்பட்டுவருகிறது.



ஈரோட்டில் அனுமதி இன்றி பிரபாகரன் பேனர்களை வைத்த பெரியார் தி.க.

மாவட்டஅமைப்பாளர் குமரகுருபரன் உள்பட 9பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



அதேபோல கும்மிடிப்பூண்டியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியை ஏற்றி

மாவீரர் நாள் அனுசரித்த கண்ணன்,நிசாந்தன், செல்வா ஆகியோர் கைது

செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு

வருகிறது”என்று டி.ஜி.பி.ஜெயின் தெரிவித்தார்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen