அறியாமல் சொல்லவேண்டாம்!
சீறியபடி போய்க்கொண்டிருந்தது ரயில். ஜன்னலோரத்தில் 25 வயது
மதிக்கத்தக்க ஒரு இளைஞன் அவன் அருகில் வயதான தந்தை.
வெளியே வேடிக்கை பார்க்கும் இளைஞன் முகத்தில் அப்படியொரு
பரவசம்.!
கைகளை வெளியே நீட்டி காற்றில் அலைந்தபடி, "அப்பா..அங்கெ
பார்த்தீங்களா? மரங்கள் எல்லாம் பின்னால் போகுது!" என்று சொல்ல,
சிரித்தபடியே மகனின் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் வியந்துகொண்டே
வந்தார் தந்தை.
அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு இளம் தம்பதி,
இவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடலையும்,அந்த மகனின் செயல்களையும்
கவனித்துக் கொண்டே வந்தனர். 'இருபத்தியஞ்சு வயது பையன் இப்படியா சின்னக்
குழந்தை போல் நடந்துக்குவான்!' என்ற முகச்சுளிப்பு அவர்களிடம்.
திடீரென அந்த இளைஞனிடமிருந்து உற்சாகக் குரல்."அப்பா..அங்க
பாருங்க..ஒரு குளம்..அதுலே ஒரு வாத்து என்ன அழகா நீந்திக்கிட்டிருக்கு,
பாருங்களேன்!" தந்தையும் எட்டிப் பார்த்து வியந்தார்.
சில நிமிடங்களில், "அப்பா..மேகமெல்லாம் ரயில் கிடவே வருது
பாருங்களேன்!" என்றான். ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தபடி. தந்தையிடம்
மீண்டும் புன்னகை!
தம்பதியோ இப்போது தர்மச்சங்கடத்தில் நெளியவே
ஆரம்பித்துவிட்டனர்.
அப்போது திடீரென மழைத் தூறல் விழவும் , சில துளிகள்
இளைஞனின் கையில் விழுந்து நனைத்தன. மீண்டும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்த
இளைஞன், ஒரு நொடி கண்களை மூடித் திறந்து, "அப்பா..மழை பெய்யுது
பாருங்க..என்ன அழகு!' என்றான் கண்கள் பிரகாசிக்க.
தம்பதியால் அதற்கு மேலும் பொறுக்க முடியாமல், அந்தத்
தந்தையிடம் கேட்டே விட்டனர்.."உங்க மகனை நீங்க என் ஒரு நல்ல
ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போய் காட்டக் கூடாது?"
அந்தத் தந்தை அமைதியாக பதில் சொன்னார்.
" நாங்க இப்போ ஆஷ்பத்திரியிளிருந்துதான் வர்றோம்.என்
மகனுக்கு கண் ஆபரேசன் முடிந்து, இன்னிக்குத் தான் கட்டுப் பிரிச்சாங்க.
வாழ்க்கையில் முதல் முறையாக பார்வை கிடைச்சிருக்கு அவனுக்கு!"
தம்பதி பேச்சற்றுப் போனார்கள்.
பல பிரச்சனைகளுக்குக் காரணமே..'இது இப்படித்தான்
இருக்கும்..இவர் இப்படித்தான் இருப்பார்' என்ற நம் முன்தீர்மானங்கள்தான்.
உண்மை என்னவென்று அறிந்துகொள்ளாமல், மேலோட்டமாகப் பார்ப்பதை வைத்து
எடுக்கும் முடிவு எப்போதுமே சரியாக இருக்காது.
அறியாமல் ஒரு சொல்லும் சொல்லவேண்டாம்!
நன்றி. மல்லிகை மகள்.டிசம்பர் 2009 .
இரா.சி.பழனியப்பன்,இராஜபாளையம்.
RSS Feed
Twitter



Samstag, Dezember 19, 2009
வானதி




1 Kommentare:
-எடுக்கும் முடிவு எப்போதுமே சரியாக இருக்காது-
எனக்கும் அப்படி தான் என்ன கரணம் -புதியவன் -
Kommentar veröffentlichen