தஞ்சை பெரிய கோயிலுக்கு இன்று காலையில் 2 இளைஞர்கள் வந்துள்ளனர். வழக்கமான சோதனையாக மெட்டல் டிடக்டர் வழியாக அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது வினோதமான சத்தம் எழுந்ததால் அவர்களை போலீசார் தடுத்து சோதனை செய்தனர். அவர்களிடம் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது.
போலீஸ் எஸ்.பி., செந்தில் வேலனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இரண்டு பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவன் தஞ்சாவூர் பள்ளிஅக்ரஹாரத்தை சேர்ந்த ஜான் (27) என்பது தெரியவந்துள்ளது. மற்றொருவன் வட நாட்டை சேர்ந்தவன்.
கைது செய்யப்பட்ட இவ்விருவரிடமும் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
RSS Feed
Twitter



Samstag, Dezember 19, 2009
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen