Samstag, 19. Dezember 2009

கனடா நாடாளுமன்றம் நுழைய தமிழ்ப்பெண்


கனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக ஈழத்தமிழரான செல்வி ராதிகா சிற்சபேசன் தெரிவாகியுள்ளார்.




இவர் Scarborough-Rouge River என்னும் பெருமளவில் தமிழர்கள் வாழும் நாடாளுமன்றத் தொகுதியிலேயே வேட்பாளராக போட்டியிட உள்ளார்.



கனடாவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) புதிய வேட்பாளர் நியமனக்கூட்டத்திலேயே இவரது பெயர் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.





இந்த நிகழ்வில் கனடா மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Olivia Chow (Trinity-Spadina) மாகாண அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Michael Prue (Beaches-East York) கலந்து சிறப்பித்ததுடன் ராதிகாவுக்கான ஆதரவு உரைகளையும் வழங்கியிருந்தனர்.



கனடாவில் உள்ள மூன்றாவது பெரிய கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி (NDP) ஈழத்தமிழரின் அரசியல் நியாயத்திற்கான ஆதரவை தொடர்ந்தும் வழங்கிவருகின்றது.



புலம்பெயர் நாடுகளில் வளரும் ஈழத்தமிழ் இளந்தலைமுறையினர் அரசியலில் ஆர்வம்காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் ஜனனி ஜனநாயகம் போட்டியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் பல நாடுகளின் உள்ளுராட்சி தேர்தல்களில் ஈழததமிழர்கள் பங்கேற்று பலர் வெற்றிபெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen