ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நேரடி விவாதத்துக்கு ஜெனரல் சரத் பொன்சேகா எந்தத் தொலைக்காட்சி முன்னும் தோன்றத் தயாராக இருப்பதாக தெரிவித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க சிங்கம் சிங்கத்துடன் தான் மோதும். பன்றிக்குட்டியுடன் மோதித் தன்னை அசிங்கப்படுத்திக் கொள்ளாது எனவும் குறிப்பிட்டார். ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது கடந்த 18 ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற ஜெனரல் பொன்சேகாவின் முதலாவது தேர்தல் பிரசார மேடையில் உரையாற்றிய ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க ஜனாதிபதிக்கு பகிரங்க சவாலொன்றை விடுத்தார். முக்கிய விடயங்கள் தொடர்பாக தொலைக்காட்சியில் நேரடி விவாதத்துக்கு எமது பொது வேட்பாளர் ஜெனரல் பொன்சேகா தயாராக இருக்கின்றார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தயாரா? என்று அழைப்பு விடுத்தார். அதற்கு இன்று வரையில் ஜனாதிபதி பக்கமிருந்து பதில் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரு பன்றிக்குட்டி ஜெனரலை விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றது. பன்றிக்குட்டியுடன் மோதுவதற்கு எமது சிங்கம் முன்வராது. சிங்கம் இன்னொரு சிங்கத்துடன் தான் மோதும். பன்றியுடன் மோதி அசிங்கத்தைப் பூசிக்கொள்ள சிங்கம் தயாராக இல்லை. இப்போதும் கூறுகின்றோம் ஜெனரல் பொன்சேகா எந்த நேரத்திலும் எந்தத் தொலைக்காட்சி முன்னும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பகிரங்க விவாதத்துக்குத் தயார் நிலையிலிருக்கிறார். ஜனாதிபதியே நேரத்தையும் இடத்தையும் தீர்மானிக்கட்டும். அதனை நாம் ஏற்றுக் கொள்கின்றோம் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். உங்கள் கருத்துக்கள்
RSS Feed
Twitter



Donnerstag, Dezember 31, 2009
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen