Freitag, 4. Dezember 2009

பிரபாகரனின் பெற்றோர், மாமியாரை விடுவிக்க இந்திய அரசு முயற்ச்சி மேற்கொள்ள வேண்டும்: திருமாவளவன்

பிரபாகரனின் பெற்றோர், மாமியாரை விடுவிக்க இந்திய அரசு முயற்ச்சி மேற்கொள்ள வேண்டும்: திருமாவளவன்


பிரபாகரனின் தயார், தந்தையார், மாமியார் ஆகியோரை விடுவிக்க இந்திய அரசு முயற்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் நாடாளுமன்றத்தில் பேசினார்.





žஈழத்தமிழர் மறுவாழ்வுக்குறித்து கொண்டுவரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானம் மீது விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை,





ஈழத்தமிழர் மறுவாழ்வுக்குறித்து கொண்டுவரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானம் மனு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்களின் நாடாளுமன்ற உரை.





இந்த வாய்ப்பினை வழங்கியதற்காக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பிரச்சனை 10 கோடி தமிழர்களை கொண்ட ஒரு தேசிய இனத்தின் பிரச்சனை .ஒரு கேள்வி ,இரண்டு கேள்வி என்கின்ற அளவில் இந்த பிரச்சனையை சுருக்கி முக்கியத்துவம் கொள்ளாமல் ஒரங்கட்டிவிடக்கூடாது.





இந்திய அரசின் ஈழத்தமிழர்களை மீள்குடியமர்த்தம் செய்யும் முயற்சியை நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். இந்த இரண்டு பக்க அறிக்கை என்பது சிங்கள அரசை ஊக்கப்படுத்துகின்ற அளவிற்கு அமைந்துள்ளதே தவிர ,எங்கள் காயம்பட்ட உணர்வுகளை ஆற்றகூடியளவில் அமையவில்லை என்பதை வருத்ததோடு இங்கே பதிவுசெய்கிறேன்.





அங்கே ஆறு மாத கெடு கொடுத்த சிங்கள அரசு கொடுத்த கெடுவுக்குள் ஈழத்தமிழர்களை மீள்குடியமர்த்தம் செய்யவில்லை இதற்க்காக இந்திய அரசு என்ன உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை இந்த அறிக்கையில் கூறவில்லை. மேலும் 2010 ஜனவரி வரை கால நீட்டிப்பு செய்திருகிறார்கள் அதை இந்திய அரசு அனுமதிக்கிறது. இது சிங்கள அரசை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைகிறது.





இந்திய அரசு இராணுவரீதியாக சிங்கள அரசுக்கு உதவுவதில் காட்டிய அக்கறையை, வதைமுகாமில் இருக்கும் மக்களை மீள்குடியமர்த்தம் செய்வதிலும், மறுவாழ்வு உருவாக்கித்தருவதிலும் இந்திய அரசு ஏன் அக்கறைகாட்டவில்லை என்று எங்களுக்காக ஐயம் ஏற்படுகிறது. 10 பேர் கொண்ட தமிழக நாடாளுமன்ற குழுவில் நானும் ஒருவனாக சென்றிருந்தேன் அங்கே 11,000 பேர் போராளிகள் என்ற அடையாளப்படுத்தபட்டு கமுக்கமான இடங்களிலும், இரகசிய இடங்களிலும் அடைத்துவைக்கப்பட்டதாக அறிந்தோம். அவர்களை பார்பதற்காக எவ்வளவோ முயற்சித்தோம் ஆனால் அவர்களை காட்டவில்லை.





இந்திய தூதரக அதிகாரிகள்தான் எங்களை வழிநடத்தினார்கள். ஆனால் 11,000 பேர் எங்கே வைக்கப்பட்டுருக்கிறார்கள் என்பதை பற்றி எங்களுக்கு சொல்லபடவில்லை. தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் தயார், தந்தையார், மாமியார் ஆகியோர் வயது முதிர்ந்தவர்கள் அவர்களையும் அடைத்துவைத்து கொடுமை செய்கிறார்கள்.





அந்த 11,000 பேரின் கதி என்ன, நிலை என்ன அவர்களை எப்படி நடத்துகிறார்கள் அவர்களுக்கு உணவு, உடை, எப்படி வழங்கப்படுகின்றன ,இந்திய அரசு அவற்றை கண்காணிக்க என்ன முயற்சிகளை செய்கின்றது என்பதை அறிந்துகொள்ள இந்த அவை விரும்புகிறது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு என்கின்ற இடத்தில் சிறப்பு அகதிகள் முகாமில் 40 50 பேர் பல ஆண்டுகளாக எந்த விசாரனையும் இன்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளனர், இந்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான் அவ்வாறு அடைத்து வைக்கப்பட்ட நிலை தொடர்கிறது, அவர்களை விடுவிக்க கூடிய முயற்சி இல்லை.





இலங்கை சிறையிலே இந்தியாவிலிருந்து வியாபாரம் செய்ய போனவர்கள் 40 50 பேர் விசா கோளாறு, பொதை பொருள் ஈடுபாடு என்று கூறி ஏறத்தாழ 10 15 ஆண்டுகளுக்கு மேலாக எந்த விசாரனை இன்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் பூர்விக தமிழர்களும் அல்ல ,வம்சாவழிதமிழர்களும் அல்ல, மீனவர்களும் அல்ல இது தொடர்பான மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன் அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டுவந்து இங்கிருந்து வழக்கு நடத்தவேண்டுமென்று கேட்டிருந்தேன். அவர்களை விடுவிப்பதற்கான, இந்தியா கொண்டுவருவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.





அங்கே சிங்கள அரசு எந்தளவிற்கு மனிதநேயம் அற்ற அரசாக நடந்துகொள்கிறது என்பதை மாந்த நேயம் உள்ள எவராலும் சகித்துகொள்ளமுடியாது. 10,000 அல்லது 20,000 பேர் தங்க கூடிய இடத்தில் 3,00,000 பேரை அடைத்து வைத்திருக்கிறார்கள். பட்டிகளிலே, தொழுவங்களிலே ஆடு,மாடு, அடைப்பதுபோல பற்றிகுட்டிகளை போல மக்களை அடைத்துவைத்திருகிறார்கள் இதையெல்லாம் மனிதாபிமான அடிபடையில் இந்திய அரசு அணுகவேண்டும், சீன அரசுடன் நெருக்கமாக இருந்து சீன அரசின் பொருளாதார முதலீட்டிற்கு எல்லா வகையிலும் உதவிவருக்கின்ற சிங்கள அரசை, இந்திய அரசு ஏன் இவ்வாறு வலிந்து ஆதரிக்கவேண்டுமென்பதே எங்களுடைய கேள்வியாக எழுகிறது. சிங்கள அரசின் போக்கு இந்திய பாதுகாப்பு ஆபத்தானது, சீன அரசுடன் சிங்கள அரசு கொண்டுவுள்ள இந்த நெருக்கமான உறவு இந்தியாவை சுற்றிலும் ஆபத்தாக போய்முடியும். எனவே இந்திய அரசின் வெளியுறவு கொள்கையில் ஒர் மாற்றம் தேவை ஈழத்தமிழர்கள் மீது கருனை காட்டவேண்டும்.





உலகம் முழுக்க 10,00,000 தமிழர்கள் சிதறுண்டுகிடக்கின்றார்கள் அவர்களை கொண்டுவந்து ஈழத்திலே குடியமர்த்த வேண்டும் .எல்லாவற்றுக்கும் மேலாக மீள்குடியமர்த்துவதும், மறுவாழ்வு அமைத்து தருவதுமட்டுமல்ல இந்தியாவின் கடமை. நாங்கள் 8 கோடி பேர் இந்திய எல்லைக்குள் வாழ்கிறோம். இந்திய குடிமக்களாய் இருந்து கேட்கிறோம். ஆஸ்திரேலியா ஒர் இந்தியர் பாதிக்கப்பட்டால் இந்திய அரசு காட்டுகிற வேகத்தை உலகத்தில் எங்கு தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் அந்த வேகத்தை ஏன் காட்டுவதில்லை?





எனவே நாங்கள் எழுப்புகின்ற கேள்வி, நாங்கள் இந்தியாவில் 8 கோடி தமிழர்களும் கேட்பதே உடனடியாக ஈழத்தமிழர்களுக்கு ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் .ராஜீவ், ஜெயவர்த்தனா ஒப்பந்ததை நிறைவேற்றும் வகையிலே வடக்கு மற்றூம் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் ஒர் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்பட இந்திய அரசு என்ன முயற்சிகளை மேற்கொண்டது என்பதை அமைச்சர் இந்த அவைக்கு விளக்க வேண்டுமென்று கேட்டு கொண்டு நிறைவு செய்கிறேன்



தகவல் : Puthiyavan

0

  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen