சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எம்.வீ. சார்ளி எனப்படும் கப்பலில் கடமையாற்றிய இலங்கையர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்டனர்.
நியூசிலாந்துக்கு சொந்தமான கப்பல் ஒன்றில் குறித்த இலங்கையர்கள் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடற் கொள்ளையர்களுக்கும், நியூசிலாந்து கப்பல் நிறுவனத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த இலங்கையர் உள்ளிட்ட கப்பல் பணியாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சோமாலிய கடற் கொள்ளையர்கள் கோரிய கப்பப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது
RSS Feed
Twitter



Freitag, Dezember 04, 2009
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen