பாரிய பட்டாளத்துடன் அமெரிக்கா செல்லவிருந்த தமது பயணத்தை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ரத்துச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, சுமார் 80 பேர் கொண்ட பட்டாளத்துடன் ஜனாதிபதி செல்ல தீர்மானித்திருந்தார்.
எனினும், 80 பேருக்கும் விசா அனுமதி வழங்க முடியாது என அமெரிக்க தூதரகம் மறுத்ததினாலேயே பயணத்தை ரத்துச்செய்யத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஜனாதிபதியுடன் விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த சிலரின் நடவடிக்கை மற்றும் பின்னணிகளை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு விசா வழங்க முடியாதிருப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளிநாட்டு அமைச்சுக்கு தெரிவித்துள்ளது.
மோசடி விசாவில் பிரித்தானியா சென்றிருந்த அமைச்சர் முரளிதரன், ஜாதிக ஹெல உறுமயவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் பலர் அவருடன் இணைந்து செல்லவிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த விஜயத்தை மேற்கொள்ளும் போது, சிலருக்கு அங்கு ஏதேனும் குற்றச்சாட்டின் பேரில் யாரேனும் கைது செய்யப்பட்டால், முழு விஜயமும் பாதிக்கப்படும் என்ற அடிப்படையிலேயே ஜனாதிபதி தமது விஜயத்தை இடைநிறுத்தியுள்ளார்.
RSS Feed
Twitter



Freitag, August 28, 2009
வானதி



0 Kommentare:
Kommentar veröffentlichen