கவிஞர் வைரமுத்துவின் அப்பா ராமசாமி தேவர்(87) சிறுநீரக கோளாறு காரணமாக மரணம் அடைந்தார். தேனிமாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியை சேர்ந்தவர் ராமசாமி தேவர். கவிஞர் வைரமுத்துவின் அப்பாவான ராமசாமி தேவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது, அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக போராடியும் அவரது உயிர் சிகிச்சை பலன் இன்றி இன்று(16.03.13) பிரிந்தது. ராமசாமி தேவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், வைரமுத்து, பாண்டியன் என்ற இருமகன்களும், விஜயலெட்சுமி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் வைரமுத்து. நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகி, கவிப்பேரரசாக உயர்ந்தவர். மறைந்த ராமசாமி தேவரின் இறுதிசடங்கு அவரது சொந்த ஊரான வடுகப்பட்டியில் நாளை(17.03.13) நடக்கிறது. வைரமுத்துவின் அப்பா மறைவுக்கு திரையுலகினர் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்
RSS Feed
Twitter



Samstag, März 16, 2013
۞உழவன்۞




0 Kommentare:
Kommentar veröffentlichen