அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட கினிகத்தேனை சிங்கள மகா வித்தியாலயத்தில் சேவையாற்றுகின்ற ஆசிரியர் ஒருவரின் திருமணத்தினை முன்னிட்டு பாடசாலைக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
எனவே இவ்விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசிரியரின் திருமணத்திற்காக இந்தப்பாடசாலையை இன்று மூடுவதற்கு அட்டன் கல்வி வலயத்தின் மேலதிக கல்விப்பணிப்பாளர் ஒருவர் அனுமதி வழங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பாக அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ரெங்கராஜியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது ஆசிரியர் ஒருவரின் திருமணத்திற்காக பாடசாலைக்கு விடுமுறை வழங்கமுடியாது என்றும் குறிப்பிட்ட பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்ட நாளுக்குப் பதிலாக பிறிதொரு நாளில் பாடசாலையை நடத்துவதற்கு குறிப்பிட்ட பாடசாலையின் அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதே வேளை மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்று மேற்கொள்ளப் படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Samstag, 22. Januar 2011
ஆசிரியரின் திருமணத்திற்கு பாடசாலை விடுமுறை


0 Kommentare:
Kommentar veröffentlichen