""உங்களுக்கு யாரோ தவறான தகவல் சொல்லியிருக்காங்க. நீங்க சொல்ற மாதிரி இலங்கையிலிருந்து மந்திரிக யாரும் இந்த ஜவுளி தொழில்நுட்ப கண்காட்சியில கலந்துக்கலை. இந்த ஃபங்ஷன் ஆர்கனைசிங் கமிட்டி சேர்மன்ங்கற முறையில சொல்றேன். அப்படி யாரும் கலந் துக்கலை'' -இதைத்தான் நம் மிடம் பதறி சொன் னார் நிகழ்ச்சி ஏற்பாட் டாளர் மதிவாணன்.
ஆனால் இலங்கை ராஜபக்ஷே கட்சியின் அமைச்சர் ரிஷாத் பத்யூதினும், இலங்கை எம்.பி. காசிம் பைசலும் கலந்து கொள்கிறார்கள் என்ற உண்மை தகவல் பெறப்பட்டு எதிர்ப்பு போராட் டங்களில் வீதியில் நின்றன பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க., நாம் தமிழர் மற்றும் இந்து மக்கள் கட்சியும்.
நிகழ்ச்சி நடைபெறும் அவினாசி சாலை கொடீசியா கண்காட்சி வளாகத்தைச் சுற்றி இலங்கை அமைச்சர்களுக்கு எதிர்ப்பு காட்ட குழுமி விட்டனர் தமிழ் உணர்வாளர்கள் பலரும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்வதற்கு போலீசும் குவிக்கப் பட்டிருந்தன. அவினாசி சாலை ஹோப் காலேஜ் பேருந்து நிறுத்தத்தில் கு. ராமகிருஷ் ணன் தலைமையிலான தோழர்கள்... ""சிங்களவனே திரும்பிப் போ, கொலைகார ராஜபக்ஷேவின் கூட்டாளியே திரும்பிப் போ...'' என்ற பதாகைகளை ஏந்திக்கொண்டு நிற்க, அவர்களிடம் வந்த போலீசார்... ""இல்லை... இலங்கை யில் இருந்து வந்த அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டனர்'' என்று கூற... ஆர்ப்பாட்டத்தை கை விடுவ தாக இராமகிருஷ்ணன் அறிவித்தார். ஆனால் அடுத்த நொடியே இலங்கை எம்.பி. காசிம் பைசல் போலீஸ் துணை யோடு ஒரு டெம்போ டிராவலரில் ஏறி கொடீசியா கண் காட்சி வளாகத்துக்குள் நுழைந்துவிட்டார் என்ற தகவல் வந்த தையடுத்து கொடீசியாவுக்குள் இராமகிருஷ்ணன் தலைமையிலான 60-க்கும் மேற்பட்ட தோழர்கள் நுழைந்தனர்.
இவர்கள் நுழைந்து விட்ட தகவலை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மதிவாணன் இலங்கை எம்.பி.காசிம் பைசலிடம் சொல்ல... மேடையில் அமராமல் வந்த வேகத்திலேயே காருக்கு ஓடினார் இலங்கை எம்.பி. காசிம் பைசல்.
கேட்டிற்கு வெளியே திரண்டு நின்றிருந்த தமிழ் உணர் வாளர்களைப் பார்த்ததும் மாட்டிக் கொண்டால் உயிர் இருக் காது என்ற பயம் தொற்றிக்கொண்ட காசிம் பைசல் காரில் பின் சீட்டில் சரிந்து கொண்டார். அந்தக் கார் வெளியேறிய பின்னரே அந்தக் காரில் காசிம் பைசல் சென்றது பெ.தி.க.வின ருக்கு தெரிய வர... கொந்தளித்துப் போன பெ.தி.க.வினர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அடித்து துவம்சம் செய்ய ஆவேசத்தோடு நுழைய... போலீஸ் அவர்களை நுழைய விடாமல் தடுத்து கைது செய்தது.
கைதான இராமகிருஷ்ணன்... ""எம் தமிழினத்தை கொன்றழித்த கொலைகாரன் ராஜபக்ஷேவின் கட்சியைச் சேர்ந்த இந்த சிங்கள நாய்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கற கேவலத்தை இந்த கோவையிலே நிறைவேற்றியிருக்கிறார்கள் பணக்கார தொழிலதிபர்கள்.
ஈழ மண்ணிலிருந்து தமிழர்கள் விரட்டியடிக்கப்படு வதைப்போல இந்த சிங்கள நாய்கள் நம் மண்ணிலிருந்து விரட்டப்பட வேண்டுமென்றே நாங்கள் ஆவேசமாய் நுழைந் தோம். ஆனால் தப்பியோடிவிட்டது சிங்கள நாய்கள். இனி மேல் எந்த சிங்களனாவது தமிழ்நாட்டிலே காலடியெடுத்து வைத்தால் காவல்துறைக்கு அறிவிப்பு கொடுக்காமல் கூட்டத்துக்குள் நுழைந்து சிங்களவர்களை தாக்குவோம்'' என்று கொந்தளித்தார்.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காசிம் பைசலும், ரிஷாத் பத்யூதினும் பதறியடித்து அடுத்த ப்ளைட் பிடித்து ஓடியது தனிக்கதை. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்த லோக்கல் மினிஸ்டர் பொங்கலூர் பழனிச்சாமியும் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து அவ ரிடம் பேசினோம்... ""ஆமாம் நானும், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரும் கலந்து கொள்ளவிருந்தோம். ஆனால் சிங்கள அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், தமிழினத்தை அழித்த சிங்களர்கள் இருக்கும் மேடையில் ஏற வேண்டாம் என்று துணை முதல்வர் ஸ்டாலின் எங்களிடம் கூறினார். இராம கிருஷ்ணனை சந்தித்து நாங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பதை சொல் லிவிட்டு வந்தேன். அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தோம்'' என்கிறார்.
தமிழ் உணர்வாளர்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்ட இந்த சம்பவத்தின் காரணகர்த்தா... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மதிவாணனை மறுபடியும் தொடர்பு கொண்டு பேசினோம். ""கலந்து கொள்ளவில்லை என்று சொன்னதைப் பற்றி இப்போது பேசாதீர்கள். அவர் வந்ததுமே திருப்பியனுப்பி விட்டோமே'' என்று போனை கட் செய்து விட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருந்தும் கலந்துகொள்ளாத வி.ஐ.பி.கள் கோவைத் தொகுதி எம்.பி.பி.ஆர்.நட ராஜன், கலெக்டர் உமாநாத், மாநகராட்சி மேயர் வெங்கடாச்சலம் ஆகியோர்.
பெருமை பொங்க இந்த சம்பவத் தைக் கூறும் தமிழ் உணர்வாளர்கள்... ""பிரிட்டனில் தமிழ் உணர்வாளர்களிடம் சிக்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிவந்தான் கொலைகார ராஜபக்ஷே. அப்படியொரு உயிர் பயத்தை இலங்கை எம்.பி.க்களுக்கும் காட்டியதின் மூலம் பெருமைப்பட்டு நிற்கிறது கோவை'' என்கிறார்கள் உணர்ச்சி பொங்க.
-அ.அருள்குமார்
0 Kommentare:
Kommentar veröffentlichen