Samstag, 11. Dezember 2010

போயஸ் கார்டனில் விஜய்? கோபாலபுரத்தில் விஜய் அப்பா!


இளைய தளபதி விஜய்... ஜெ’வை போய்ஸ்கார்டனில் மதியம் 2.30-க்கு சந்திக்க இருக்கிறார்’-இப்படியொரு பரபர தகவல் 9-ந்தேதி காலை முதலே மீடியாக்கள் மத்தியில் பரவ... போயஸ்கார்டனை கேமராக்கள் சகிதம் முற்றுகையிட்டார்கள் செய்தியாளர்கள். இந்தக் கூட்டத்தில் ஜெயா டி.வி. குழுவினரும் மிகுந்த ஆர்வத்தோடு கேமராவும் கையுமாக இருக்க... செய்திக்கு நம்பகத்தன்மை அதிகரித்தது. போதாக்குறைக்கு... விஜய்யின் ’பி.எம்.டபிள்யூ’ கார் வந்தால் அதை கார்டனுக்குள் அனுமதிக்கும் படியும் செக்யூரிட்டிகளுக்கு கார்டன் அறிவுறுத்தியிருந்ததாக தகவல் கசிந்தது.




அரசியல் கட்சி தொடங்கும் வியூகத்தில் நடிகர் விஜய் இருப்பதையும்... இதற்காக கடந்த 28-ந் தேதி வடபழனியில் இருக்கும் தனக்குச் சொந்தமான ஜே.எஸ்.கல்யாணமண்டபத்தில்... தனது ரசிகர்களை அழைத்து... விஜய்யும் விஜய்யின் அப்பா டைரக்டர் எஸ்.ஏ.சியும்... கருத்துக் கேட்டதையும்... அப் போது 90 சதவிகித ரசிகர்கள் கட்சி தொடங்கி அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்கவேண்டும் என்று சொன்னதையும்... இதைத் தொடர்ந்து ஜெ’வை விஜய் சந்திப்பதற்காக முயற்சிகள் தொடங்கிவிட்டதையும் கடந்த டிசம்பர் 04-07 தேதியிட்ட நக்கீரன் இதழில். "மகனின் அரசியல் வியூகம்- விஜய் அப்பா பேட்டி'’ என்ற தலைப் பில் விரிவான ரிப்போர்ட்டாகத் தந்திருந்தோம்.


நமது இதழ் வெளியான மறுநாள் முதல் வரை சந்தித்தார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி.


விஜய்யின் திடீர் அரசியல் பிரவேச முடிவுக் கும்... ரசிகர் மன்ற கருத்துக்கேட்புக் கூட்டத்துக்கும்.... எஸ்.ஏ.சியின் திடீர் கலைஞர் சந்திப்பிற்கும்.... என்ன காரணம்? என நாம் எஸ்.ஏ.சி தரப்பிலேயே விசாரித்தபோது....


""தனது வளர்ச்சிக்கு தி.மு.க. பிரமுகர்கள் சிலரே இடைஞ்சலாக இருப்பதாக பலசந்தர்ப்பங்களில் விஜய் கருதினார். இந்த நிலையில் ஈரோடு ரசிகர் மன்ற நலத்திட்ட விழா வுக்குப் போனபோது... ஏராளமாக ரசிகர்கள் கூட்டம் திரள... ரசிகர்களை நெருங்க விடாமலே... போலீஸ் விஜய் யைத் தடுத்துவிட்டதாம். அதோடு போதுமான போலீஸ் பாதுகாப்பையும் தரவில்லையாம். இதுதான் விஜய்யை ஏகத்துக்கும் டென்ஷனாக்கிவிட்டது. நாமும் அரசியலில் குதிக்கவேண்டும் என்ற ரோசத்தை அவருக்கு உருவாக்கிவிட்டது. அதனால்தான் ரசிகர்கள் கூட்டத்தை நடத்தி கருத்துக்கேட்டார். அதே சமயம்... விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி... கலைஞரின் தீவிர அபிமானி. எனவே ரொம்பவும் யோசித்து... முதலில் கலைஞரிடமே இந்தப் பிரச்சினையைக் கொண்டுப்போவது என்று முடிவெடுத்து... அதன் அடிப்படையிலேயே கலைஞரை சந்தித்திருக்கிறார்'' என்றார்கள் நம்மிடம்.

இந்தப் புகாருக்கு கலைஞரின் ரியாக்ஷன் என்ன? என அதே தரப்பிடம் நாம் கேட்டபோது “"இதைக் கேட்ட கலைஞர் உடனே போலீஸ் உயர் அதிகாரிகளிடம் இது குறித்து விசாரிக்க... அப்படியெல்லாம் இல்லை. ஒரு டிஎஸ்.பி., இரண்டு இன்ஸ்பெக் டர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால்... விஜய்யை கூட்டம் நெருங்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று அவர்களின் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர்தான் சொன்னார் என்று கூற... இனி விஜய்க்கு அதிக பாதுகாப்பு தர உத்தரவிட்டார் முதல்வர்'’ என்றனர் அழுத்தமாய். இதைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளும் எஸ்.ஏ.சி.யை சந்தித்துப் பேசினார்கள்.


இப்படி பலவிதத்திலும் நாம் விசாரணையை நடத்திவந்த நிலையில்தான்.. விஜய், போயஸ்கார்டன் வருகிறார் என்ற தகவல் பரபரப்பைப் பற்றவைத்திருந்தது. நேரம் ஓடி யதே தவிர... விஜய், போயஸ் கார்டனுக்கு வரவே இல்லை. மாலைவரை காத்திருந்த மீடியாக்கள் ஏமாற்றத்தோடு அங்கிருந்து கிளம்பின.


விஜய்.. இவ்வளவு பரபரப்புக்கு மத்தியில் எங்கே போனார்? என துருவியபோது... அவர் வியாழன் காலை எமிரேட் விமானம் மூலம் துபாய் சென்று... அங்கிருந்து சான்பிரான்சிஸ்கோ சென்றது உறுதியானது. பிறகு இந்த வதந்தி எப்படி பரவியது?

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி.தான் கார்டனுக்கு வந்து... சீக்ரெட்டாக ஜெ’வை சந்தித்து... விஜய்க்கு சூரியக் குடும்பத்தினர் சிலர், தொழில் ரீதியாக கொடுக்க ஆரம்பித்திருக்கும் தொல்லை குறித்து முறையிட நினைத்திருக்கிறார். ஆனால் கார்டன் முன்பு மீடியாக்கள் குவிந்துவிட்டதால்... அவர் சந்திப்பை ரத்து பண்ணிவிட்டார் என்ற தகவல் அ.தி.மு.க. தரப்பிலிருந்து கசிந்துள்ளது. தொழில்ரீதியான பிரச்சினை என்ன? என்று விசாரணையைத் துருவினோம்.

விஜய்யின் ’காவலன்’ படம் ரீலீஸுக்கு ரெடியாக இருக்கும் போதும்... திரையரங்க உரிமையாளர்கள் தரப்பு விஜய்யின் ஆறேழு படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டன... எனவே நஷ்டத்திலும் அவர் பங்கெடுத்துக் கொள்வதாக உறுதியளித்தால்தான் இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணுவோம்’ என்று ஒருபக்கம் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.’ இதற்கிடையே ’வேலாயுதம்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த விஜய்யை ஜெமினி பிக்சர்ஸ் தனது ரிமேக் படமான ’த்ரீ இடியட்ஸ்’ படத்துக்கு புக் பண்ணியது. இதை இயக்க இருப்பவர் டைரக்டர் ஷங்கர். பட ஷூட்டிங் ஆரம்பம் என்பதை நம்பி.. த்ரீ இடியட்ஸுக்காக தன் தலைமுடியைக் கூட ஷங்கர் சொன்னபடி ஒட்ட வெட்டினார் விஜய். இந்த நிலையில் த்ரீ இடியட்ஸில் இருந்து விஜய் தூக்கப்பட்டுவிட்டார்.

சன்பிக்ஸர்ஸுக்கு நெருக்கமான ஜெமினி பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் இப்படி ஒரு முடிவை எடுக்க... சன் பிக்ஸர்ஸ்தான் காரணம் என்று நினைக்கிறார் விஜய். முடி ஒட்ட வெட்டப்பட்டுவிட்டதால் வேலாயுத்திலும் 20 நாட்களுக்கு நடிக்க முடியாத நிலை. எனவேதான் விஜய் ஃபாரினுக்கு மனக்கிலேசத்தோடு கிளம்பிவிட்டார். மகனின் மன வருத் தத்துக்கு மருந்து தடவ... எல்லாப் பக்கமும் அலைபாய்ந்துகொண்டிருக்கிறார் அவரது அப்பா எஸ்.ஏ.சி. என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.


விஜய்யின் அடுத்த மூவ்? அது எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம் என்பதே இப்போதைய நிலை.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen