என் நிகழ்கால இளைய வயது நண்பர்களும்,,
சம வயது நண்பர்களும் என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி..
கருணாநிதி,,
எம்.ஜி.ஆர்,,
ஜெயலலிதா,,
என்று யார் முதல்வராக இருந்தாலும் திரைப்பட நடிகர் நடிகைகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்து.. அவர்களுக்கு சலுகை கொடுத்து .. திட்டங்களை
நனடமுறைப்படுத்துவது ஏன்? என்பதுதான்..
அவர்களுக்கான இலவச வீட்டுமனை,,
இலவச வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம்,,
ஓய்வூதியத்திட்டம்,,
அரசின் பரிசுகள்,,
நடிகைகள் ஆபாசமாக உடையணிந்து வரும்,,
வண்ண வண்ண விளக்குகளின் நடுவே ஆபாசமாக ஆடும் ஆட்டங்கள் இடம்பெறும்
நிகழ்வுகளில் பங்குபெற்று...
அவர்களை பாராட்டிப் பேசுவது..
வாழ்நாள் சாதனையாளர் விருது...
தளபதி.. புரட்சிநாயகன்.. புரட்சிக்கலைஞர்.. கலைஇளவரசன்..
என நடிகர்களையும்..
இதற்கு சற்றும் குறையாத வகையில் நடிகைகளையும் அடைமொழியோடு பாராட்டுவது...
அவர்களின் பிறந்தநாளில் வாழ்த்துவது..
பொங்கல்.. விடுதலை நாள் போன்ற நாட்களில்.. இந்த கூத்தாடிகளை வைத்து
முன்னிலைப்படுத்தி.. எல்லா அரசியல் வாதிகளின் தொலைக்காட்சிகளும்..
கூத்தடிப்பது..
இப்படி திரை உலக கூத்தாடிகளை முன்னிலைப்படுத்தி நம் ஆளும் கட்சியும்
எதிர்க்கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு மக்களிடையே அவர்களைக்
கொண்டுசெல்ல வேண்டிய அவசியம் என்ன?
விபச்சாரம் என்பது என்ன?
அதுபற்றி எனக்கு எப்பவுமே ஒரு கருத்து உண்டு..
வயிற்றுப் பசிக்காக இரவில் காமப்பசி தீர்க்கும் தொழிலாளிகள் பற்றிய ஒரு
அனுதாபம் உண்டு.. பெண்களை கைதுசெய்யும் காவல்துறை.. அவளோடு படுத்த
காமுகனை விபச்சாரன் என்று அடையாளப்படுத்தி கைது செய்வதில்லை...
அவை பற்றியவை பல ஆய்வுகளுக்கு உட்பட்டவை..
ஆனால்
தன் உடையாலோ.. நடையாலோ.. பாவனையாலோ.. பிறரின் மனதில் காம உணர்வைத்
தூண்டும் எவனும் விபச்சாரனே,, எவளும் விபச்சாரியே.. இது இன்றைய
நடிகைகள்,, நடிகர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்பதில் யாருக்கும்
மாற்றுக் கருத்து இருக்காது என்று நம்புகிறேன்.
இப்படி நடிகர்கள்,, நடிகைகள்,, விபச்சாரம்,,அரசியல்கட்சிகள் என ஒரு
வரிசைப்படுத்தவேண்டிய அவசியம் ஏன்?
ஒரு மனிதன் பிறந்தது முதல் உண்ணும் உணவு ஏழாகப் பிரிந்து...
ஏழாவது பிரிவாக வரும் (ஆண்களானால் விந்து அல்லது பெண்களானால் நாதம்
என்பதாகி) பொருள்…
அவர்கள் பருவம் எய்தும் முன் மூளைக் கட்டுமானப் பொருளாக இருந்து...
பருவம் எய்தியபின் அது உடலில் ஒரு இரசாயன மாற்றத்தை உண்டுபண்ணி..
ஆணை பெண்ணை நோக்கியும்.. பெண்ணை ஆணை நோக்கியும் ஈர்க்கும் ஒரு நிலைக்கு
கொண்டு வருகிறது..
{(இந்த வகையில் உருவாகும் விந்து அல்லது நாதமானது..
ஆள் பார்த்து அமைவது இல்லை..
மனைவியை இழந்த விதவனாக இருந்தாலும்..
கணவனை இழந்த விதவையாக இருந்தாலும்..
உடலுக்குள் சென்ற உணவின் ஏழாவது தாதுவாக வந்து கொண்டேதான் இருக்கும்..
எனவே விதவனோ விதவையோ மறுமணம் செய்து கொண்டு வாழ்வது.. தனிமனித
ஒழுக்கத்திற்கும்.. சமூக ஒழுக்கத்திற்கும் நல்லது என்பது உறுதி.)}
இந்த மாறுதல் வந்தவுடனேயே யாரும் காமம் கொண்டு அலைவதில்லை..
பாரம்பரியமாக தொடந்துவரும் வாழ்க்கைமுறை,,,
நடப்பு உலகின் தேவை கருதி தன்னை படிப்பாளியாக உயர்த்திக்கொள்ள..
நல்ல வேலை வாய்ப்புகளைத் தேடிக்கொள்ள..
என்று பல தேவைகளினால் உந்தப்பட்டு...
கவனத்தை சிந்திப்பதிலும்.. சீர்மைபெறுவதிலும் இருக்கும் இளைஞனுக்கு.. ஒரு
கட்டத்தில் வாழ்க்கை பற்றிய சிந்தனை வருகிற்து
தன்வாழ்க்கை
தன்னைச் சார்ந்தவர் வாழ்க்கை
சமூக வாழ்க்கை
நாட்டு நடப்பு
உலகின்போக்கு
என்று விரிந்த சிந்தனை வரும்பொழுது அவன் சிந்திக்க ஆரம்பிக்கிறான்.
சிந்திக்க ஆரம்பித்த புத்தன்.. மகாவீரர்.. திருவள்ளுவர் போன்றோர் ஞானிகளாயினர்..
அதே வேளையில் சமூகத்தில் காணும் ஏற்றத்தாழ்வுகளை காணும் பலர் மனதில்
ஏற்படும் முற்போக்கு சிந்தனையால் பெரியாராகவோ.. காமராசராகவோ..
ஜீவாவாகவோ.. உருவெடுத்து மக்களை ஈர்த்து மதவாதபேர்வழிகளை ஊழல்பேர்வழிககளை
எதிர்த்து இயக்கம் கண்டு பார்ப்பண பனியாக்களை ஒழிக்க பாடுபடலாம்..
அல்லது இவர்களைத் திருத்த வன்முறை மட்டுமே சாத்தியம் என்றெண்ணி பகத்சிங்
போன்ற தோழர்களாக உருவாகலாம்
இப்படி இளைஞர்கள் உருவானால்,,
அது ஆளும் கட்சியினருக்கு தலைவலியாக உருவெடுக்கும் என்ற நோக்கத்தின் காரணமாக..
அப்படியான கிளர்ந்தெளும் எண்ணம் கொண்ட இளைஞர்களோ.. மக்களோ உருவாகிவிடக்
கூடாது என்பதற்காக..
அவர்களை..
அவர்களது எண்ணங்களை...
வேறுதிசையில் திருப்பிவிட..
அவர்களது உடலில் ஏற்படும் வாலிப இராசயன மாற்றங்களுக்கு ஏற்ப…
சினிமா என்ற நல்லதொரு விஞ்ஞான ஊடகத்தில் காமக் கூத்தாடிகளை மிகைப்படுத்தி..
கூத்தாடிகளுக்காக மன்றம் அமைத்தல்..
அவர்களுக்கு கோவில்கட்டுதல்...
அவ்ர்களின் படம் வெளியாகும் அன்று கட்டவுட்டுக்கு பால் ஊற்ற ஊக்கப்படுத்தல்..
அவர்கள் நடித்த படம் நன்றாக ஓட அலகு குத்தவைத்தல்.. பால்குடம் எடுக்க வைத்தல்..
நடிகையின் எச்சில்பட்ட சோடா நீரை அண்டாவில் கலக்கி ஆயிரக்கணக்காணோரை அந்த
நீரைக் குடித்து இனம்புரியா முட்டாளாக்குதல்..
அதை தங்களின் செய்திகளில் வெளியிட்டு நாட்டில் உள்ள எல்லா இளைஞர்களையும்
அந்த முட்டாள்தனத்திற்கு தயார் செய்தல்....
இப்படியாக கடவுளுக்கு இணையான வகையில் கூத்தாடிகளை முன்னிலைப்ப்டுத்தி…
சாதி,, மதம்,, கடவுள்,, என்கிற
மூடநம்பிக்ககு இணையாக இன்னொரு நிலையை உருவாக்கிவிட்டார்கள்..
இதில் அடிமையாகிவிட்ட இளைஞர்கள் எந்தஒரு விழிப்புணர்வும்
பெறமாட்டாட்டார்கள் என்ற நம்பிக்கையில்..
அரசியல்வாதிகள்
ஊழல்செய்யலாம்..
ஊரை அடித்து உலையில் போடலாம்..
சக இன மனிதன் சாகடிக்கப்படும் போது,, பதவிக்காக அலையலாம்...
இன்றைய நாட்டு நிலை அப்படித்தானே இருக்கிறது..
திருப்பெரும்புதூர் நோக்கியா விசக்கசிவில் என்ன நடந்தது?
இயந்திரத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட கதி என்ன?
அந்த செய்தியை அமுக்கியதில் ஆளும் கட்சியின் தொழிற்சங்க தொடர்பு என்ன?
இதை எதிர்க் கட்சிகள் கண்டு கொள்ளாதது ஏன்?
என்பது பற்றியெல்லாம் இளையதலைமுறையினர் சிந்திக்காதது ஏன்?
நாட்டில் நடைபெறும் எந்த் ஊழலையும்.. திருட்டையும் கண்டு சினம் கொள்ளாதது ஏன்?
எவனுக்கு தெறியும்..
நடிகையின் தொடையிலிருந்து அவளது மற்ற சங்கதிகள் பற்றி இன்றைய இளைஞர்கள்
அறிந்திருக்கும் அளவுக்கு வேறு எதுவும் தெறியாது..
ஒவ்வொரு கட்சிக்கும் அடையாளமாய் ஒவ்வொரு ஊழல்..
நாட்டில் மதக்கலவரம்.. சாதிக்கலவரம்.. தூண்டி அரசியல் பண்ணும் அயோக்கியர்கள்..
இப்படியாக நாட்டையே நாசம் செய்யும் எத்தனை அவலங்கள் நடைபெற்று வருகின்றன..
ஊழல் செய்யாத கட்சி எதாவது இருக்கின்றதா?
இல்லை என்றால் ஒரு புது ஊழலற்ற இயக்கத்தை கட்டும் வல்லமை இளையதலைமுறைக்கு
வராமல் போனது ஏன்?
சினிமா நடிகர்கள்,, நடிகைகள்,, பற்றி பேசிப் பேசி மகிழும் மாணவ
மாணவியர்,, இளைஞர்கள்,, இளைஞிகள் எத்தனை பேர் சமூக அவலம் பற்றி பேசி
கவலைப்படுகிறார்கள்..
சிந்தியுங்கள் தோழர்களே.. அரசியல்வாதிகளுக்கு சினிமாக் கூத்தாடிகள்
எதற்கு பயன்படுகிறார்கள்..
சினிமா கூத்தாடிகளுக்கு அரசியல்வாதியால் ஏற்படும் பயன் என்ன? சிந்தியுங்கள்...
0 Kommentare:
Kommentar veröffentlichen