Mittwoch, 15. Dezember 2010

கலைஞரை எதிர்த்து சீமான்?

தன் மீதான தேசியப்பாதுகாப்பு சட்டத்தை உடைத்து விட்டு விடுதலையாகியிருக்கிற ’நாம் தமிழர் ‘இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசியல் ரீதியாக அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து தீவிரமாக திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்.




தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமானை அடைத்தது செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து 10-ந்தேதி காலையில் சீமான் விடுதலை யாகிறார் என்கிற செய்தி பரவியதும் தமிழகம் முழுவது மிருந்தும் ஆயிரக்கணக்கில் நாம் தமிழர் இயக்கத்தினர் வேலூர் சிறையை முற்றுகையிட்டனர். ஆனால் நீதிமன்ற உத்தரவை எடுத்து வரும் வழக்கறிஞர்களின் தாமதத்தால் சீமான் விடுதலையாவது தள்ளிக்கொண்டே போனது. நேரம் செல்ல செல்ல... கொட்டும் மழையிலும் இயக்கத்தினரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தன. கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால், சிறைக்குள் நுழைய முயற்சித்தனர். சிறை நிர்வாகம் அனுமதிக்க மறுத்தது. இதனால் அரசுக்கு எதிராக முழக்கங்களை ஆவேசமாக எழுப்பினர்.



இந்நிலையில், சீமானை வரவேற்க வந்திருந்த திருச்சி வேலுச்சாமி, கொளத்தூர் மணி, பேராசிரியர் தீரன், தமிழ்முழக்கம் சாகுல் அமீது, இயக்குனர் கௌதமன் ஆகியோரை மட்டும் உள்ளே அனுமதித்தனர் சிறைத்துறையினர். நீதிமன்ற உத்தரவை மதியம் 1 மணிக்கு வழக்கறிஞர் சந்திரசேகரன் கொண்டு வர, சிறைத்துறை நடைமுறைகள் அவசரம் அவசரமாக முடிக்கப்பட்டு மதியம் 1.30-க்கு வெளியே வந்தார் சீமான்.



""இந்த சிறைக்குள் உள்ளே போனபோது எப்படி கம்பீரத்துடன் போனதோ அதே கம்பீரத்துடன் வெளியே வருகிறது எங்கள் புலி. இனிதான் எதிரிகளுக்கு கிலி'' என்று உரத்து குரல் கொடுத்தனர் இயக்கத்தினர். சீமான் முகத்தை பார்த்ததும் இயக்கத்தினரின் ஆரவாரம் விண்ணை அதிரவைத்தது... பட்டாசுகளும் குத்துப்பாட்டுகளும் நடனங்களும் வெடித்து கிளம்பின.



இந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் சீமானிடம், இயக்குனர் பாலா வந்திருப்பதைச் சொல்ல, ""அய்யோ.. அவன் எதுக்கு இங்கெல்லாம் வந்துகிட்டு..''’என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே.. பாலா வந்துவிட.. பாலாவை கட்டிப்பிடித்து முத்தம் தந்து நன்றி தெரிவித்தார்.



பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான்,’’""என் மீது இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இரண் டையும் உடைத்துவிட்டு வெளியே வந்துள் ளேன். இரண்டு முறையும் விதிகளை புறக்கணித்துத்தான் இந்த சட்டத்தை என்மீது பிரயோகித்துள்ளனர். என்னை அழிப்பதற் காக சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது தமிழக அரசு. இதனால் என் இயக்கப் பணி, தொழில் எல்லாம் பாதிக்கப்பட்டிருப்பதால் அரசு மீது வழக்குப் போடலாமென இருக்கிறேன். தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன்''’ என்றவரிடம் "கலைஞரை எதிர்த்து நீங்கள் பொது வேட்பாளராக நிறுத்தப்படவிருக்கிறீர்கள் என்று உங்கள் கட்சியினர் கூறுகிறார்களே?'’ என்றதற்கு, ’""அப்படியும் நடக்கலாம்''’’என்று இயல்பாக சீமான் கூற.. அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சீமானின் அந்த பதிலால் நாம் தமிழர் இயக்கத்தினரும் ஏக உற்சாகம் காட்டினார்கள்.



கார் மேல அமர்ந்தபடியே கிளம்பிய சீமான், வேலூரில் இருந்த பெரியார் சிலை, அம்பேத்கர் சிலை, எம்.ஜி.ஆர்.சிலை என வரிசையாக மாலை அணிவித்துவிட்டு வேலூர் நகர சாலைகளில் வலம் வந்தார். அவரது காருக்கு பின்னால் 200-க்கும் மேற் பட்ட வாகனங்கள் அணிவகுத்தன. இந்த வாகன அணிவகுப்பு போக்குவரத்து நெரிசலில் சிக்கிகொள் ளாமல் இருக்கும்படி போக்குவரத்தை நெறிப்படுத் தினர் காவல்துறையினர். அது மட்டுமல்லாது... வேலூர் அண்ணாசாலை என்பது ஒரு வழிப்பாதை யாக இருக்கிறது. முக்கிய அரசியல் பிரமுகர்கள் யாரேனும் முன்கூட்டி அறிவிப்பு செய்து விட்டு வேலூருக்கு வரும் பட்சத்தில் இந்த சாலை இரு வழிப் பாதையாக திறந்துவிடப்படும். சீமானுக்காக இந்த சாலையை இரு வழிப் பாதையாக சில நிமிடங்கள் மாற்றி அமைத்தனர் போலீஸார்.



சீமானை வரவேற்க வந்த நாம் தமிழர்கள் சிலரை மடக்கிப் பேசினோம். திருவாரூரை சேர்ந்த கவிஞர் தென்றல் சந்திரசேகர்,’""தமிழக மீனவர்களின் நலனுக்காக சிங்கள மீனவர்களை எச்சரித்த சீமானை இந்த அரசு சிறைப்படுத்தியது. அதனை முறியடித்து வெளியே வந்துள்ள சீமானின் விடு தலை... எதிரிகளுக்கு மரண அடி'' என்றார் ஆவேச மாக. புதுக்கோட்டையிலிருந்து வந்திருந்த ஜெயசீலன்,’’""தமிழினத்துக்காக போராடும் தமிழின, தமிழ்த்தேசிய உணர்வாளர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என பார்ப்பன- வட இந்திய ஊடகங்கள் பாய்கின்றன. அதற்கு இங்குள்ள அரசும் அடிபணிந்து விடுவதுதான் சீமானின் கைது. இது போன்ற செயல்களால் இந்த அரசுக்குதான் கெட்டப்பெயர்''’’என்றார்.



வேலூரிலிருந்து சென்னை நோக்கிப் புறப் பட்ட சீமானுக்கு வழி நெடுகிலும் பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. இரவு 9.50-க்கு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு வந்தார் சீமான். அங்கேயும் ஆயிரக்கணக்கில் நாம் தமிழர் இயக்கத்தினர் திரண்டிருந்தனர். எல்லோரும் சீமானை கட்டிப்பிடித்து தங்களின் மகிழ்வை தெரிவித்துக்கொண்டனர். திடீரென்று அங்கு ஒரு பொதுக்கூட்டம் போல ஏற்பாடு செய்ய.. இயக்கத்தினர் அனைவரும் அப்படியே உட்கார்ந்தனர். சீமான் உள்ளிட்டவர்கள் அமர சேர்கள் போடப்பட்டன. மைக் வரவழைக் கப்பட்டது.

முதலில் பேசிய பேராசிரியர் தீரன்,’""பாண்டிய மன்னனிடம் ஆக்ரோஷமாக நீதி கேட்ட கண்ணகி மாதிரி, சென்னை உயர் நீதிமனறத்தில் போராடி வெற்றிப்பெற்று வெளியே வந்துள்ளார் சீமான். இனி தமிழின துரோகிகளுக்கு எதிரான அரசியலை சீமான் வலிமையாக முன்னெடுக்க வேண்டும்'' என்றார். அடுத்து பேசிய திருச்சி வேலுச்சாமி, ""வேலூர் சிறை என்பது நிரந் தரம். அதில் உள்ளே போய் வருபவர்கள்தான் மாறுவார்கள். நேற்றும் இன்றும் அந்த சிறை சீமானுக்கு சொந்தமாக இருந்தது. நாளை மற்றவர்கள் போகும் நிலை உருவாகும்''’’என்று துவக்கி அரசை கடுமையாக விமர்சித்தார்.



இதனையடுத்து மைக் பிடித்த சீமான், ""உண்மையை நாம் பேசினால்... சட்டத்தை தங்க ளுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள். அதற்குத் தான் ஆட்சி மாற்றம் கூடாது... அரசியல் மாற்றம் வேண்டுமென்கிறோம். அந்த அரசியல் மாற்றத்தை நாம் கொண்டுவருவோம். இந்த தேர்தலில் காங் கிரஸையும் காங்கிரஸோடு கூட்டணி வைத்துள்ள தி.மு.க.வையும் ஒழிப்பதுதான் நமது கொள்கை யாகும்''’’என்று ஆரம்பித்த சீமான்,’""தேசிய கட்சின்னு பீத்திக்கொள்கிற காங்கிரஸே... உனக்கு தைரியமிருந்தா இந்த முறை தேர்தலில் தனித்து போட்டியிடு பார்க்கலாம். பீகாரிலாவது 4 சீட்டு கிடைச்சது. இங்கு அதுவும் கிடைக்காது. 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடு. உன்னை எதிர்த்து எமது இயக்கத் தோழர்கள் களமிறங்குவார்கள்.



யார் வெற்றி பெறுகிறார்கள்னு பார்த்துவிடலாம். வெற்றி பெறுவது கிடக்கட்டும்டா.... நாம் தமிழர் இயக்கத்தை விட ஒரு வாக்கு அதிகம் வாங்கிவிடு.... நாங்கள் அரசியல் பேசுவதையே விட்டுவிடுகிறோம். தனிச்சு போட்டியிட உனக்கு தைரியம் இருக்காது... உன்னை தூக்கி சுமக்கிறதுக்குன்னேதான் கருணாநிதி யும் ஜெயலலிதாவும் இருக்காங்களே.... அவங்க கிட்ட 80 சீட்டு வாங்கி.... எல்லாத்துலயும் ஜெயிக்க வேணாம். 8 சீட்டு ஜெயிக்க முடியுமா? ஜெயித்துக்காட்டு பாக்க லாம்''’’என்று ஒரு பிடிபிடித்த சீமான், காங்கிரசுக்கு எதிரான விமர்சனத்தை காட்டமாக வெளிப்படுத்தி னார். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆர்ப்பரித்தனர் இளைஞர்கள். சீமானின் முழக்கமும் நாம் தமிழர் இயக்கத்தினரின் ஆவேசமும் அந்த இரவு நேரத்தில் அந்த பகுதியை அதிர வைத்தது. கூட்டம் முடிந்த பிறகு நள்ளிரவு 2 மணி வரை இயக்கத்தினருடன் அளவளாவி விட்டுத்தான் படுக்க சென்றார் சீமான். இவர்களிடம் பேசும் போது,’’""நமது இலக்கு என்பது 2016 தான். ஆனால் இந்த தேர்தலில் தமிழினப் பகைவர்களை தோற்கடிப்பதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும்.



நமக்கான அரசியலும் நாம் தமிழரிடம் வரும். அப்போது 2016-ல் நாம் தமிழர் இயக்கம் தான் தமிழகத்தின் அரசியல் சக்தி’’என்றவர் தொடர்ந்து பேசும்போது, ""நாம் ஊருக்கு ஊர் கூட்டம் போட்டு அர சியல் பேசினால் மட்டும் நமது இலக்கை அடைய முடியாது. முதலில் உனது (இளை ஞர்கள்) அரசியலை உன் குடும்பத்தில் இருந்து துவக்கு. உனது அப்பாவும் அம்மா வும் அண்ணன் தம்பிகளும் ஆளாளுக்கு ஒரு அரசியல் கட்சியில் இருந்து கொண்டு நீ மட்டும் நாம் தமிழர் இயக்கத்தில் இருந்தால்... நமக்கான அரசியலை வென்றெடுக்க முடியாது. அதனால் குடும்பத்தை அரசியல்மயப்படுத்து.



இதற்கான கால கட்டம் நமக்கு தேவை. அந்த கால கட்டம்தான் 2016.. குடும்பத்தையும் தெருவையும் ஊரையும் நாம் அரசியல்மயப்படுத்திக்கொண்டே... எதிர் வருகிற தேர்தல்களிலெல்லாம் தமிழின பகைவர்களை தோற்கடித்து விட்டால்... அரசியலில் எதிரிகளின் எண்ணிக்கை குறையும். அதை செய்யத்தான் வரும் தேர்தலை பயன்படுத்த வேண்டும்'' என்று நாம் தமிழர் இயக்கத்தின் அடுத்தக்கட்ட அரசியலை போதித்தார் சீமான்.



முதல்வர் கலைஞரை எதிர்த்து பொதுவேட்பாளராக நிறுத்தப்படுவார் என்கிற கருத்து பற்றி நாம் தமிழர் இயக்கத் தின் முன்னோடிகளிடம் கேட்டபோது,’’ ""இந்த முறை தேர்தலில் சீமான் நிற்க மாட்டார். ஆனால் பொதுவேட்பாளராக அவர் களமிறங்க வெண்டுமென்பது 90 சதவீத இயக்கத்தினரின் கொள்கை முடிவாக இருக்கிறது. இது குறித்து அவர் இன்னும் தெளிவாக முடிவெடுக்கவில்லைங்கிறதுதான் யதார்த்த உண்மை'' என்கிறனர்.



-இளையசெல்வன், ராஜா
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen