எம் உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!
தென் இந்திய தமிழகத்தில் கடந்த மே 18ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் ஜனநாயக இயக்கம் உலகம் வாழ் புலம் பெயர்ந்த ஈழத் தமிழினத்திலும் வியாபித்துள்ளது. இவ்வியக்கம் தற்பொழுது தமிழகத்தில் ஒரு அரசியற் கட்சியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இக் கட்சி கனடாவிலும் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் பெருமளவான ஆதரவையும் பெற்றிருக்கின்றது. சென்ற ஆண்டு மே மாதத்தில் நடை பெற்ற மனித உரிமை மீறல்கள் இனப்படுகொலைகளுக்கு எதிரான குற்றங்களை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். அதே நேரம் ஐக்கிய நாடுகள் சபையால் பரிந்துரை செய்யப்பட்ட போர்க்குற்ற ஆணைக் குழுவிற்கு உலகத்தமிழ் மக்கள் அனைவரும் இம்மாதம் 15ம் திகதிக்கு முன்னர் உங்கள் மின் அஞ்சல் மூலமாக போர்க்குற்ற விசாரணை மிக அவசியம் என்றும், சர்வதேச நீதிமன்றம் சுயாதீனமாக போர்க்குற்ற வாளிகளை விசாரணை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.
மின் அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:
e-mail: panelofexpertsregistry@un.org மூலம் உங்கள் சொந்த முகவரி போன்ற விபரங்களோடு உடனடியாக அனுப்பிவையுங்கள். அத்தாட்ச்சிப்படங்கள் சாட்சியங்களுடனும் மற்றும் பொதுவான போர்க்குற்ற விபரங்களுடனும் இக்கடிதங்களை அனுப்பி வைத்து உங்கள் வரலாற்று கடமையையும் செய்து வைப்ப்பீர்கள் என எதிர் பார்க்கின்றோம்.
நன்றி
நாம் தமிழர் கட்சி – கனடா
RSS Feed
Twitter



Dienstag, Dezember 14, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen