இனிய தமிழீழ நெஞ்சங்களே கனடாவில் மொன்றியலில் தமிழீழ மாவீரர்களின் பெற்றோர்களை போற்றும் மாபெரும் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றீர்கள் உங்களுக்குத் தெரியும் தமிழீழ விடுதலைக் களத்தின் தலை நிமிர்ந்த மாவீரர்கள் உலக
விடுதலையாளர்களின் வரலாற்றிலேயே தன்னிகர் அற்றவர்கள் கழுத்தில் நஞ்சுகட்டிய ஒரே ஒரு விடுதலைப் படையாய் களத்தில் நின்று உலக வரலாறு படைத்தவர்கள் தமிழீழ நிலத்தில் விளைந்த புலிகள் அஞ்சுதலும் கெஞ்சுதலும் அறியாராய் நெஞ்சுரம் கொண்டு விஞ்சமர் கண்ட விடுதலையாளர்கள் ஈடினை அற்ற அந்த விடுதலையாளர்களை போற்றும் இவ் வேளையில் அவர்களை ஈன்று தமிழீழ மண்ணுக்கு கொடை தந்த பெற்றோர்களை நினைந்து மெய் சிலிர்ப்போம். அவர்களை வாழ்த்துவோம் அவர்களை வணங்குவோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளை மாவீரரை ஈன்ற தாய் இருக்கிறாளே அவள் யார்? நெருப்பை சுமந்த கருப்பை. நஞ்சை விடுதலைக் களத்தில் உண்ட பிள்ளைக்கு பாலை ஊட்டி வளர்த்த தாயின் நெஞ்சை எப்படி மறப்போம். கோழையை மகனாக மகளாகப் பெறாமல் ஒரு வீரனை வீராங்கனையை தமிழீழ மண்ணுக்கு கொடையாக்கினானே தந்தை அவன் தோழை வாழ்த்த இவ்வேலை பயன் படட்டும் வாழ்த்துவோம் மாவீரர் பெற்றோரை மனமார வாழ்த்துவோம் தன்னிகர் அற்ற அந்த தாய் தந்தையர் எப்படியெல்லாம் தங்கள் பிள்ளைகளை மண் நிமிரட்டும் என்று கொடையாக்கினார்கள்.
ஆழக்கடலில் அங்கயற் கண்ணி எதிரி கப்பலை உடைக்க தன்னை தூள் தூலாக்கி வெடிக்கச் செய்த செய்தி அவளை ஈன்ற பெற்றோரை எப்படி உலுக்கி இருக்கும் இருந்தாலும் எங்கள் பிள்ளை நாட்டுக்காகவே மடிந்தால் என்று பெருமைப்பட்ட அவள் பெற்றோர்களின் ஆழக்கடலின் ஆழமான தாய் மண் பற்றை தமிழீழ பற்றை எப்படி நாம் மறக்க முடியும.
விடுதலை பசிக்கு தன்னையே உணவாக்கிக் கொண்ட திலீபனை ஈன்ற அவன் தந்தை எப்படித் துடித்தார் கண்ணீர்; வடித்தார் என்பதையும் பின்பு அவன் வீரச்சாவில் எப்படி மகிழ்ந்தார் மகனைப் புகழ்ந்தார் என்பதையும் நான் அறிவேன்.
கரும்புலிகளாய் களமாடி கண்மூடிய பெரும் புலிகளின் சாவினை எப்படி அவர்களின் பெற்றோர்கள் எதிர்கொண்டார்கள் என்பதையெல்லாம் களமாடிய புலிகள் வரலாற்றில் கண்டோம்.
ஒன்றா இரண்டா நாற்பதாயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களின் பெற்றோர்களை தமிழீழ விடுதலை வரலாற்றில் இதுவரை நாம் எறிமலை குன்றாய் புயலின் ஓங்கிய அலைவீச்சாய் வரலாற்றில் பார்த்தோம். சங்ககாலத்தில் பிள்ளைகளை போர் களத்திற்கு எண்னை தடவி தலைவாரி அனுப்பி வைத்த அதே வரலாற்றின் தொடர்ச்சியாய் தமிழீழத்தின் சமராடிய புலிகளின் பெற்றோரை நாம் பார்க்கிறோம் இந்த வரலாறு இந்த வரலாறு இனியும் தொடரும்.
மாவீரர்கள் மடிந்தார்கள் என்று சொல்லுகிறார்கள் இல்லை தமிழீழ மண்ணில் பிறந்தார்கள் இனியும் பிறப்பார்கள் பிறந்து கொண்டே இருப்பார்கள். விடுதலைக்கான தேவை இருக்கும் வரை விடுதலைக்கான போராட்டமும் இருக்கும். தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிகாட்டுதலில் தமிழீழ விடுதலைக் களம் தொடர்ந்து நிலை கொள்ளும் மாவீரர் பெற்றோரை வாழ்த்துவோம் மாவீரர் பெற்றோரை வாழ்த்துவோம் மாவீரர் பெற்ரோரை வணங்குவோம் மாவீரர்பெற்றோரை வணங்குவோம் மாவீரர் பெற்றோரை பின்பற்றுவோம் மாவீரர் பெற்றோரை பின்பற்றுவோம்.
RSS Feed
Twitter



Sonntag, November 21, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen