இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக நாட்டின் ஐனாதிபதியாக வெள்ளிக்கிழமையன்று பொறுப்பேற்றுள்ளார். பதவியேற்றவுடன் உரையாற்றிய அவர் நாட்டில் நிரந்தர சமாதானத்தை கொண்டுவருவேன் என்று தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் பிறகு இலங்கை மாபெரும் நாடாக திகழ்வதாகவும் அவர் கூறினார்.
பதிவியேற்றுள்ள ஐனாதிபதிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத் தயாரெனவும் அது அறிவித்துள்ளது.
ஆனால் இந்த பதவியேற்பு வைபவத்தை எதிர்கட்சிகள் புறக்கணித்துள்ளன. பதவியேற்பை ஒட்டி நடத்தப்பட்ட இராணுவ அணிவகுப்பையும், பாரம்பரிய நடனங்களையும் அவர்கள் வீண் செலவு என வர்ணித்துள்ளனர்.
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவை ஜனாதிபதி மகிந்த தோற்கடித்தார். அதன் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆளும் கட்சியே பெரும் வெற்றி பெற்றது.
RSS Feed
Twitter



Freitag, November 19, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen