தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கும் தென்னிந்தியச் சினிமா நட்சத்திரம் அசின் இன்று வவுனியாவிற்குச் சிறப்பு விஜயம் மேற்கொண்டார்.
சிறிலங்காவில் நடைபெறும், இந்திப் படப்பிடிப்புக்காக சிறிலங்கா சென்றுள்ள நடிகை அசினுக்கு, தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக்கள் காட்டப்பட்டு வரும் நிலையில், சிறிலங்காவில் பலமான பாதுகாப்பும், சிறிலங்கா ஜனாதிபதியின் சிறப்பு விருந்தினராகவும் கவனிக்கப்பட்டு வருவதாக்க கொழும்புத் தகவல்கள் தெரிவித்து வந்தன.
இந்நிலையில், இன்று காலை வவுனியா நகருக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுடன் நடிகை அசின் விஜயம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா பொது வைத்தியசாலைக்குச் சென்ற ஷிராந்தி - அசின் குழுவினருக்கு தமிழ முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கபடுகிறது.
வைத்தியசாலையிலுள்ள சத்திர சிகிச்சைக் கூடம், மற்றும் கண் சிகிச்சைப் பிரிவுகளுக்கு விஜயம் செய்த மேற்படி குழுவினர், அங்குள்ள குறைபாடுகளையும், தேவையான விடயங்களையும் கேட்டறித்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 RSS Feed
 RSS Feed Twitter
 Twitter 

 


 Sonntag, Juli 11, 2010
Sonntag, Juli 11, 2010
 வானதி
வானதி

 
 
 



0 Kommentare:
Kommentar veröffentlichen