தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ சாகும் வரையான உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தமைக்கு அவரது சின்ன வயது மகளின் உண்ணாவிரதப் போராட்டமே காரணம் என்று தமிழ்-சி.என். என் இற்குக் கிடைத்திருக்கும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு விமல் வீரவன்ஸவின் மனைவி சசி தொலைபேசி அழைப்பு விடுத்திருக்கின்றார். கணவரை எப்படியேனும் உயிருடன் காப்பாற்றித் தர வேண்டும் என்று தாலிப் பிச்சை கேட்டிருக்கின்றார்.
விமல் வீரவன்ஸ உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்ற நாள் முதல் அவர்களின் புதல்வியும் உணவு உண்ணாமல் அடம் பிடிக்கின்றார் என்று ஜனாதிபதிக்கு தெரிவித்திருக்கிறார்.
இதை அறிந்த உடனேயே விமல் வீரவன்ஸவின் மகளுடன் ஜனாதிபதி தொலைபேசியில் பேசினார். இரவுச் சாப்பாட்டை விமலின் மகள் சாப்பிட வேண்டும் என்றும் விமல் வீரவன்ஸவை மறுநாள் மதியச் சாப்பாட்டுக்கேனும் கட்டாயம் அழைத்து வருவார் என்றும் ஜனாதிபதி தொலைபேசியில் வாக்குறுதி வழங்கி இருக்கின்றார்.
இதன் பின்பு விமலின் குடும்பத்தினர் விமலை பார்க்க சென்றிருந்தார்கள். மகளின் உண்ணாவிரதம் குறித்து விமலுக்கு சாடைமாடையாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது அதைத் தொடர்ந்து அங்கு சென்ற ஜனாதிபதியும் பிரம்மாஸ்திரமாக அதைத்தான் பாவித்து இருக்கின்றார்.
இந்நிலையில் பாசத்துக்கு கட்டுப்பட்ட விமல் நான்கு நிபந்தனைகளை ஜனாதிபதிக்கு விதித்துக் கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் .
0 Kommentare:
Kommentar veröffentlichen