Mittwoch, 14. Juli 2010

திருச்சியில் வைகோ-கடலூரில் பழ.நெடுமாறன் சிறையிலடைப்பு

இலங்கை தூதரகத்தை மூடக்கோரி தடையை மீறிச் சென்ற வைகோ, நெடுமாறன் கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.




தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்வதை கண்டித்து சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், பெரியார் திராவிடக் கழக பொது செயலாளர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.




ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அனைவரும் இலங்கை தூதரகத்தை மூடுவதற்காக செல்ல முயன்றனர். போலீசார் தடுத்தும் யாரும் நிற்கவில்லை. எனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ, பழ.நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் மற்றும் 40 பெண்கள் உள்ளிட்ட 282 பேரை போலீசார் கைது செய்தனர்.



கைது செய்யப்பட்ட வைகோ, நெடுமாறன், ம.நடராஜன், விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது 188, 341, 153(A), 143, 7 I (A), 145,285,506(I), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப் போடப்பட்டது.







பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டு மயிலாப்பூரில் உள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். மாஜிஸ்திரேட் மலர்விழி உத்தரவின் படி இவர்கள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.




வைகோ திருச்சி சிறையிலும், பழ.நெடுமாறன் கடலூரி சிறையிலும், ம.நடராஜன் மதுரை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் கைது செய்யப்பட்ட மற்றவர்களும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen