உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் இன்று நடக்கும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் முன்னாள் சாம்பியனான ஜெர்மனி மற்றும் உருகுவே அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்தவை என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் 19 வது உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடர் நடக்கிறது. இதன் இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் - நெதர்லாந்து அணிகள் தெரிவாயின. அரையிறுதியில் தோல்வி அடைந்த ஜெர்மனி- உருகுவே அணிகள் இன்று நடக்கும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.
உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை ஸ்பெயினிடம் பரிதாபமாக இழந்தது ஜெர்மனி அணி. இன்றைய போட்டியில் உருகுவேயிடம் சிறப்பாக ஆடினால் மட்டுமே மூன்றாவது இடத்தை எட்ட முடியும். கடந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்த தோமஸ், முல்லர் ஆகியோர் இன்று களமிறங்குவது ஜெர்மனியின் பலத்தை அதிகரித்துள்ளது.
ஸ்பெயினுக்கு எதிரான அரையிறுதியில் முதுகுப் பகுதியில் காயம் அடைந்த குளோஸ் பங்கேற்பது சந்தேகம் எழுந்துள்ளது. அணியின் நட்சத்திர வீரர்களான பொடோல்ஸ், டிராகோவ்ஸ், டோனி குரோஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். தற்காப்பு பாணியிலான ஆட்டத்தை விட்டு அதிரடியாக ஆடினால் மட்டுமே ஜெர்மனிக்கு வெற்றி கைகூடும்.
யார் வெற்றிபெறப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் , , , , , , ,
0 Kommentare:
Kommentar veröffentlichen