Dienstag, 8. Juni 2010

தமிழுணர்வாளர்களிடம் கெஞ்சும் போலீஸ்

ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.   பலவேறு அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.
புதுக்கோட்டையில் நாம் தமிழர் இயக்கம், மதிமுக, சிபிஐ ஆகிய கட்சிகளூடன் மேலும் பல அமைப்பினர் இணைந்து  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அனுமதி இல்லையென்றாலும் தடையை மீறி பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.   இந்த  ஆர்ப்பாட்ட பேரணி நீதிமன்றம் முன்பு முடிந்தது.
நீதிமன்றத்துக்குள் நுழைந்து கோஷமிட முயன்றனர்.  அதற்குள் போலீசார் வந்து தடுத்துவிட்டனர்.  இதனால் நீதிமன்ற வாசலில் நின்றே கோஷமிட்டுவிட்டு மாலையில் பெரும் போராடம் நடத்துவோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
அப்போது அங்கே வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன்,   ‘’ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் எல்லோரும் தயவு செய்து வாருங்கள்.  உங்களை கைது செய்ய வேண்டும்’’ என்று கேட்டிருக்கிறார்.

ஆர்ப்பாட்டம் செய்த போது கைது செய்ய வேண்டியது தானே.  இப்பொழுது வந்து கூப்பிட்டால் எப்படி என்று மறுத்துவிட்டார்கள்.
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்...வாருங்கள்..என்று தமிழ்மாறன் கூப்பிட்டது,  அப்படி என்றால் மாலையில் மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்யவிருக்கிறோம்.  அப்போது வந்து கைது செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen