தமிழீழம் சிங்களத்திடம் வீழ்ந்த பின்பு எமது உறவுகள் பலர் பல நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் கோரி வெளிக்கிட்டார்கள்.
அப்படி தஞ்சமடைந்த நாடுகளில் தமிழ் நாடும் அடங்கும். பல நாடுகளில் தஞ்சமடைந்தவர்கள் விடுதலைப்புலிகள் ஆகவே அவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு சிங்கள அரசு கேட்டு வருவது அனைவரும் அறிந்தது. அந்த வகையில் சுமார் 250க்கும் மேற்பட்ட பெயர் பட்டியல் ஒன்றை தமிழக அரசிடமும் சிங்கள அரசு கையளித்திருக்கின்றது.
அவர்களில் பெரும்பாலானோர் சென்ற ஆண்டு மே17ம் திகதிக்குப் பிறகு வந்தவர்கள். இவர்கள் அனைவரையும் கைது செய்து தம்மிடம் ஒப்படைக்குமாறு சிங்களம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. தற்சமயம் செம்மொழி மாநாடு நடைபெறுவதால் இப்போதைக்கு ஏதும் செய்து தொலைக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிவித்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தபடி உள்ளன.
அதே கட்டளையை தமிழக அரசு தனது காவல்த் துறைக்கும் அறிவித்திருக்கின்றது. நேற்று முள்ளிவாய்க்காலை மறக்க வேண்டாம் என பத்து பக்கத்திற்கு எழுதி வைத்துவிட்டு தூக்கிலிட்டு மறைந்து போன ஓவியக்கல்லூரி மாணவனின் மரணமும் மூடி மறைக்க தமிழக காவல்த்ததுறை முயல்வதாக தெரிகிறது.
ஆகவே செம்மொழி மாநாட்டிற்குப்பிறகு தமிழ் நாடு வழமையில் இருந்து மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் உள்ள உறவுகளே ஏற்கனவே பல துரோகிகளையும் புலனாய்வாளர்களையும் தமிழகத்தில் சிங்கள அரசு அனுப்பியிருந்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
அப்படிப்பட்டவர்கள் ஊடாகவே பலரது தகவல்கள் திரட்டப்பட்டிருக்கும் என்பதை நாங்கள் நம்புகின்றோம். துரோகிகளது வேலைகள் முடிந்து இப்போது பட்டியல் கையளிக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அனைவரும் தங்களது பாதுகாப்புக்களை உறுதிசெய்யுமாறு நாம் வேண்டுகின்றோம்.
RSS Feed
Twitter



Dienstag, Juni 22, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen