Dienstag, 18. Mai 2010

ஈழத்தின் கண்ணீர் கொழும்பு வீதிகளில்..

சர்வதேசமே உன்மேற்பார்வையில் ஒரு இனம் கதற கதற அழிந்து இன்றோடு ஓராண்டு என்னால் என்ன செய்யமுடியும் நினைத்து நினைத்து அழுவதைத்தவிர என்னைப்போல் எத்தனை உள்ளங்கள் அழுதிருக்கும் ஆனாலும் என்மனதை ஆறுதல் படுத்தியது என்னுடன் சேர்ந்து 3 நாட்களாய் வானமும் அழுகுதய்யா வானத்தில் அழுவது யார்???????? வானத்தில் இருந்து வந்த கண்ணீர் சிங்களனின் வெறி வெற்றியாட்டத்தை தடுத்தது தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும் இப்படி ஆறுதல் எனக்குநானே சொல்லிக்கொன்டேன்.... அரசியல் லாபத்திற்காக பார்த்துக்கொண்டிருந்தாய் சர்வதேசம்(இந்தியாவும்,சீனாவும் ஈழப்பிரச்சனைக்குள் மோதிக்கொள்ளவேண்டும் இது சர்வதேசத்தின் ஆசை, அமெரிக்கா...,...,...,), வியப்பூட்டும் வளர்ச்சியின் நிமிர்த்தம் நீ பயந்தாய்(இந்தியா) என்று புலிகளின் வான்படை உலகிற்குத்தெரிந்ததோ அன்று நினைத்தாய் என்ன செய்தேனும் புலிகளை அழிக்கவேண்டுமென்று நச்சுவாயு, இரசாயன ஆயுதம் எத்தனை கொடூரம் எம்மக்களையும் அழித்தாய் இதை புலிகள் என்றும் மன்னிக்கமாட்டார்கள் ,உன்னருகில் பாகிஸ்தான்,சீனா, உனக்குள்ளேதான் தமிழ்நாடு ,இலங்கையும் உனக்கெதிராக மாறும் உன்னை யார் அழித்தாலும் கேட்பார் யாரும் இருக்கமாட்டார்கள்.

கருநா(ய்)நிதி ஐயா பிரம்மச்சாரியம் பேசி மக்களைக்கவர்ந்து அதில் கவர்ந்து வந்தவர்களுடன் லீலைகள் நடத்திய நித்தியானந்தாவுக்கும், தமிழ் என் உயிரென வசனம்பேசி தமிழ் இனந்தையே அழிக்க உதவிய மாமா)மன்னனே நீ எத்தனை நாடகமாடினா(நா)ய் பதவியைத்துறப்பேன்??????? உனக்கும் நித்தியானந்தாவிற்கும் என்ன வித்தியாசம் உனக்கு அரியணை அவனுக்கு சிறையறையா???? தமிழ்நாட்டு மக்களே கொஞ்சமாவது இந்நாளில் யோசியுங்கள்........

யாராகவிருந்தாலும் ஈழ அழிவை தடுக்க முடிந்தும் தடுக்காத, ஏதோ ஒரு லாபத்திற்காக ஈழத்தை அழித்த அதற்குத்துணை புரிந்த உங்கள் அழிவையும் சர்வதேசம் பார்க்கும்.....நாங்களும் பார்ப்போம் அன்றும் வானம் அழும் யார் அழிந்தாலும் எம் கண்ணில்  கண்ணீர் வரும் எங்கள் நோக்கம் அடுத்தவர் அழிவில் சந்தோசப்படுவது இல்லை...........
கண்ணீரோடு சிங்கப்பூரிலிருந்து தமிழன்
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen