ஸ்பார்ட்டகாசில் தொடங்கிய
விடுதலை வேர்
உலகத்தை ஊடுருவி
விருட்சமாய்
உயர்ந்திருக்கிறது.
அடக்குமுறையாளர்கள்
பிணக்குழிக்குள்
குவிக்கப்படுவதை
காலம் குறித்து
வைத்திருக்கிறது.
போராளிகள்
விதைகளானபோது
இந்த பகை பிணங்கள்
உரமானது.
விடுதலை
உயிரோடு உலாவும்
கலகக்காரன்.
கலகத்தின் மூலமே
கைவிலங்குகள்
உடைக்கப்படுகிறது.
கலக நெருப்புத்தான்
விடுதலை காவியத்தை
படைத்தளிக்கிறது.
நாமும் ஒரு
கலகக்காரனை
அடையாளம் கண்டோம்.
அவன் இனத்தின்
உயிராதாரம்.
தமிழின் ஆணிவேர்.
இனம் அழியாமல் காக்க
அவன் உருக்காய்
உறுதியாய் இருக்கிறான்.
அடக்குமுறைகள்
அழிந்துபோகும்.
ஆட்சி அதிகாரம்
சிதறிப்போகும்.
விடுதலை மட்டுமே
உயர்ந்து நிற்கும்.
தமிழீழ விடியலை
முறியடிக்க
யாரால் முடியும்?
புலிகளாய் களம் புகுந்து
புது புவி அமைத்தோம்.
புறநானூற்று வரிகளில்
புது கவி படைத்தோம்.
அடக்கிட நினைத்த
அக்கிரம கரங்கள்
எழுந்து நிற்குமோ?
எரிதழல் போன்ற
எமது எண்ணம்
அணைந்து போகுமோ?
படைப் பல கண்ட
எமது தலைவன்
படையணி முன்னால்
பகட்டாய் திரியும்
நெல்லி முட்டை
சிதறிப்போகும்.
சிங்கள ஆட்சி
தமக்குத் தாமே
குழியை பறிக்கும்.
குறிபார்க்கும்
எம் தலைவன்
குறிப்பெடுக்கிறான்.
தொடங்கும் சமரில்
புதிய தமிழாய்
பிறப்பெடுக்கிறார்.
தாய் தமிழ்
அவனை
மார்பில் அணைத்து
சேதி சொல்கிறாள்.
பீதி அடையும்
பகைப்படை அழியும்
நாளை சொல்கிறாள்.
நாமும் இணைவோம்.
நாளை விடியும்
எமது நாடு.
அதுவே எமது
தமிழின மக்களின்
தாய்மடி வீடு.
RSS Feed
Twitter



Freitag, Mai 14, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen