
- இதன் நிமித்தம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான விபரங்களையும் இத் திட்டம் தொடர்பாக உங்கள் மத்தியில் இருக்கக்கூடிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களையும் கலந்து பேசுவதற்கான சந்திப்பொன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் அனைத்துலகச் செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. என குறிப்பிட்டு சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் அனைத்துலகச் செயலகத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பிதழின் விபரம் வருமாறு
11.04.2010, பிற்பகல்: 3 மணிக்கு,
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது குறித்த சந்திப்பு!
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை மே மாதம் 2 ஆம் திகதி உலகளாவியரீதியில் நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதனைத் தாங்கள் அறிவீர்கள். இவ்வாறு தேர்தல்களை குறிப்பிட்ட காலத்தில் நடாத்தி முடித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வினை மே மாதம் 17-19 காலப்பகுதிக்குள் கூட்டுவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள் கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத் தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான வழிகாட்டிக் கோட்பாடுகளில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடும் என மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அமையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வெற்றிகரமாக அமைத்திட உழைப்பது நமது தாயக விடுதலையை நேசிக்கும் அனைவரினதும் கடமையாகும்.
- தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சுவிஸ் வாழ் தமிழீழ மக்கள் ஆற்றிய பங்களிப்பையும் அதற்காக பணியாளர்கள் வழங்கி வந்த பெரும் உழைப்பையும் நாம் நன்கு அறிவோம். இந்த வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெற்றிக்கும் நீங்கள் உறுதுணையாக நிற்பீர்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம்.
இம்மாதம் முதல் இடம் பெற்றுவரும் கருத்தமர்வுகளில் இணப்பாளர் திரு.விஸ்வநாதன் உருத்திரகுமாரன் செய்மதிமூலமான தொடர்பாடலூடாக பங்கு பற்றி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் தேர்தல் விளக்கங்களை வழங்குவதோடு மக்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தும் வருகின்றார் . எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மே 2ம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களில் புலம்பெயர் தமிழ் மக்கள் பெருவாரியாக அணிதிரண்டு வாக்களிப்பதன் ஊடாக அனைத்துலக சமூகத்திற்கு காத்திரமான செய்தியை தெரிவிக்க முடியும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க செயற்குழு இணைப்பாளர் வி. உருத்ரகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார்.
சுவிசின் பிரதான நகரங்களில் இவ்வார இறுதியில் நடைபெற்ற நாடு கடந்த அரசாங்கம் தொடர்பான விளக்கக்கூட்டங்களில் காணொலி ஊடாக நேரடியாக உரையாற்றும் போதே உருத்ரகுமாரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு கடந்த தமிழீழ அரசாங்கமென்ற அரசியல் வலுமையம், ஜனநாயகப் பண்பாட்டின் உச்ச வெளிப்பாடாக எமது சமூகத்திலிருந்து வெளிப்படவேண்டுமென்ற எதிர்பார்ப்பு எமக்கு உண்டு. இம்முயற்சியின் பலம் என்பது மக்கள் பலத்திலிருந்துதான் கட்டியெழுப்பப்படவுள்ளது. எனவே புலம்பெயர் தமிழ் மக்கள், மே 2ம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில், தமிழர் தாயகத்தில் வாக்களிப்பில் பங்கேற்கும் மக்களின் தொகையை ஒத்ததாக பங்கேற்று வாக்களிக்கும் பட்சத்தில் அது அனைத்துலக சமூகத்தின் அவதானிப்பினைப்பெறும்.
மே 18-19ஆம் நாட்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வைக் கூட்டுவதன் மூலம், ஈழத் தமிழினம் நொந்துபோன ஒரு இனமாக, அவர்களின் விடுதலை உணர்வைச் சிதைத்துவிட்டதாக கொக்கரிக்கும் சிறிலங்கா பேரினவாத அரசுக்கு தகுந்த பதிலடியைக் கொடுப்பதோடு, தமிழ் மக்களின் விடுதலை வேணவாவை உலகறியச் செய்ய முடியுமெனவும் அவர் உறுதிபடக் கூறினார்
சுவிஸ் சூரிச்சில் நடைபெறும் பிரதான கருத்தமர்விலும் சுவிஸ் வாழ் தமிழீழ மக்கள் பங்கு பற்றுவதுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்பாட்டிலும் இணைத்து நமது வரலாற்றுப்பணியை ஆற்றிட ஒன்றிணையுமாறு உரிமையுடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான சுவிஸ் செயற்குழுவின் அனைத்துலகச் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றுகூடல் நடைபெறும் இடம்: சூரிச்
- Salzweg 1, 8048 Zurich
11.04.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி தொடர்புகளுக்கு: சசி 078 850 90 22
- காலம்: 11.04.2010, பிற்பகல்: 3.00 மணி
- நாடுகடந்த அரசு அமைப்பதற்கான சுவிஸ் செயற்பாட்டுக் குழு
அனைத்துலகச் செயலகம், தொடர்புகளுக்கு: info@govtamileelam.org
- http://govtamileelam.org/gov/அல்லது
- www.tgte-swiss.ch, தொடர்புகளுக்கு: 022 734 00 63
0 Kommentare:
Kommentar veröffentlichen