இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என அமெரிக்காவின் பிரபல மனித உரிமை ஆர்வலர் ஜெசி ஜேக்சன் கூறியுள்ளார்.
பிரிட்டனில் கடந்த 24 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவை அமைப்பின் மாநாட்டின் இறுதிநாள் நிகழ்ச்சியில், அமெரிக்காவின் பிரபல மனித உரிமை ஆர்வலரும், அமெரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவரும், அந்த மக்களின் விடுதலைக்காக ஜார்ர்ஜ் புஷ்சிற்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிட்டவருமான ஜெசி ஜேக்சன் கலந்து கொண்டார்.
அப்போது இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலை பற்றி உரையாற்றிய அவர், இந்த முக்கியமான கால கட்டத்தில், நீதிக்கும், சுதந்திரத்திற்காகவும் போராடும் தமிழ் மக்கள் அனைவரும் தமது கனவை நிறைவேற்ற இணைந்து நிமிர்ந்து நின்று, துணிந்து போராட வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் விடுதலைக்கான பயணத்தை நிறுத்தக்கூடாது என்றார்.
தென்னமெரிக்க மக்களும், தென்னாபிரிக்க மக்களும் போராடி தமது சுதந்திரத்தைப் பெற முடியும்போது, ஏன் தமிழ் மக்களால் அது முடியாது எனவும் கேள்வி எழுப்பிய அவர், தொடர்ந்து போராடினால் தமிழ் மக்கள் தமது இலக்கை அடையலாம் என்றார்.
அத்துடன், அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காக தாம் மேற்கொண்ட போராட்டங்களை எடுத்து விளக்கிய அவர், விடுதலைப் பாதை கடினமானது எனினும், கடந்த வரலாறுகளைக் கொண்டு தமிழ் மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் எனவும் கூறினார்.
RSS Feed
Twitter



Dienstag, März 02, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen