Mittwoch, 3. März 2010

இயக்குனர் சீமான் மீது உடனேடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -: எஸ்.ஆர்.பி., குற்றச்சாட்டு

தமிழ் சினிமாவில் விடுதலைப் புலிகளின் பணம் ஆண்டுக்கு 350 கோடி ரூபாய் வரை புழக்கத்தில் விடப்படுகிறது. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் கூட்டங்களில் பேசிவரும்


திரைப்பட இயக்குனர் சீமான் மீது உடனேடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ,'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறினார்.





சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழ்ச் சினிமாவில் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இதில் வெளி நாடுகளிலிருந்து விடுதலைப்புலிகளின் பணம் இங்குள்ள முக்கிய நபர்கள் மூலம் தமிழ்ப் படத் தயாரிப்புகளில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. ஆயிரம் கோடியில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 350 கோடி ரூபாய் வரை தமிழ்ப்படங்களில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இதனால் தான் புதிய படங்களின் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளன. கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.திரைப்பட இயக்குனர் சீமான், "நாம் தமிழர்' என்ற இயக்கத்தை துவங்கி, செயல் வீரர்கள் கூட்டத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தியிருக்கிறார். இக்கூட்டங்களில் சீமான் பேசியவைகள் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. பணத்தை பற்றி கவலைப்படாதே, எத்தனை ஆயிரம் கோடி பணம் தேவைப்பட்டாலும் அதைத் தர பலரும் தயாராக இருக்கிறார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.





இந்திய ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து, கருணாநிதி செயலாற்றி வருவதை சீமானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தலைவர்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் வகையிலும் சீமான் பேசிவருகிறார்."இந்தியா இனிமேல் எங்களுக்குப் பக்கத்து நாடு தான். எங்கள் நாடு இல்லை. இனிமேல் இந்திய இறையாண்மை என்று யார் பேசினாலும் அவர்களை நாடு கடத்துவோம். தமிழர் அல்லாதோர் கடைகளையும், நிறுவனங்களையும் அடித்து நொறுக்குங்கள், எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள், நான் இருக்கிறேன்' என்றும் சீமான் பேசி வருகிறார்.சீமானின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தாவிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும். முதல்வர் கருணாநிதி உட்பட பல தலைவர்களுடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்படும். இவ்வாறு பாலசுப்பிரமணியம் கூறினார்.

இன்றைய தினமலர் நாளிதழில் வந்த செய்தி..





****** நாம் தமிழர் இயக்கத்தில் வளர்ச்சியை துரோக தேசிய கட்சியினரும், தரங்கெட்ட திராவிட கழத்தினரும், பார்ப்பன ஊடங்கங்களும் எப்படி எல்லாம் தடுக்க முனைகிறார்கள் பாருங்கள்... முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது இதை கூறியது யார் என்று... இந்த எஸ்.ஆர்.பி தமிழன் அல்ல தெலுங்கன்...





இப்படிப்பட்ட எதிரிகளுக்காகவேனும் நாம் ஒன்றுபட்டு வென்றாக வேண்டும்...********.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen