நாம் தமிழர் செயல் வீரர்களே தமிழ் இன உணர்வாளர்களே, நாம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கிறோம் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தியே. தமிழ் இன அரசியல் எழுச்சி மாநாடு நடப்பதற்கு வெகு குறைந்த கால அவகாசமே உள்ள நிலையில் நாம் தான் முழு வீச்சில் மாநாட்டு துவக்க செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க விளம்பர படுத்த களப்பணி ஆற்ற வேண்டும்.
இந்த சூழ்நிலையில் இங்குள்ள தமிழர்களை இரு வகையாக பிரிக்கலாம் ௧) இன
உணர்வு தமிழர்கள் ௨)பணத் தமிழர்கள். தங்களால் முடிந்த பண உதவி ஏதாவது
செய்ய முடியுமா என்று இங்குள்ளவனிடம் கேட்டால் நான் என் இனத்திற்காக
உயிரை வேண்டுமானால் கொடுப்பேன் ஆனால் பணம் மட்டும் கிடையாது என்பர்.
சரி உன் உயிர் வேண்டாம் உன் உழைப்பை மட்டும் எங்களுக்கு கொடு என்று கூறினால்
இல்லைஇன்று அவசர வேலை இருக்கிறது என்று அவசரமான பதில் வரும். இவர்களா
உணர்வுள்ள தமிழர்கள்.
நாம் ஒருவரிடம் அன்புடன் இருக்கிறோம் என்பதை நாம் வாய் வார்த்தையாக மட்டும் சொல்லாமல் அவசர நேரத்திற்கு உதவி செய்கிறோம் அதன் மூலம் நம் அன்பை வெளி படுத்துகிறோம்.
உதவி ஏதும் செய்யாமல் உனக்காக நான் என் உயிரையும் கொடுப்பேன் என்று வசனம் மட்டும் பேசுவதால் எந்த பயனும் இல்லை. அது போல நான் தமிழ் இன உணர்வாளன் இனத்திற்காக உயிரையும் கொடுப்பேன் என்று வசனம் பேசி கொண்டிராமல் நம் தோழர்கள் தங்கள்
உழைப்பின் மூலமாகவும் உழைப்புடன் கூடிய பொருளாதார உதவி செய்வதன் மூலமாக மட்டுமே தங்கள் இன உணர்வை வெளிபடுத்த வேண்டும் .அவர்களே உணமையான உணர்வாளர்கள். நம் இனம் காக்கும் போராளிகள். ஒரு ரூபாய் ஆனாலும் அதுவும் உணர்வின் வெளிப்பாடே.
நாம் தமிழர் தோழர்களே நம் இனத்திற்காக போராட கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது
தேசிய தலைவர் வாழ்ந்து கொண்டிரு க்கிற கால கட்டத்தில் வாழும் பெரும் பேறை நாம் பெற்று இருக்கிறோம். அவரின் தம்பிகளாகிய நாம் செந் தமிழன் சீமான் தலைமையில் ஒன்று சேர கூடிய, போராட கூடிய அறிய வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது .இந்த இனத்திற்கான நம் போராட்டம் நாளைய வரலாற்றின் பதி வுகள்
என் அறிவுக்கு எட்டிய சிற் சில ஆலோசனைகள்
" நாம் தமிழராய் ஒன்றிணைந்து மீட்டெடுப்போம் தமிழீழத்தை"
.
இரு தமிழனாக இரு. இரு உணர்வுள்ள தமிழனாக இரு
.
இரு தமிழனாக இரு. இரு உணர்வுள்ள தமிழனாக இரு
இரு தமிழினத்தை காக்க உயிர் கொடுக்கும் தமிழனாக இரு
எழு தமிழின துரோகிகளை அழிக்கும் நெருப்பாய் எழு.
எழு தமிழின துரோகிகளை அழிக்கும் நெருப்பாய் எழு.
எழு தமிழனை தமிழனாக மாற்றுவதற்கு எழு
"மே 18 நமது அரசியல் இயக்கத்தின் துவக்க வி ழா . தமிழினத்தின் விடியலின் ஆரம்ப விழா வீறு நடை போடுவோம் விடியலை நோக்கி அலைகடலென திரளுவோம் மதுரையை நோக்கி "
--
தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர்)
0 Kommentare:
Kommentar veröffentlichen