சிங்கள சிறையில் இருந்து எங்கள் குரல் கேட்கலையோ ?
காடையர் கூட்டம் இங்கே இராணுவ சீருடையில் !
முகமாலையில் தினமும் விழி திறந்து பார்த்திருந்தோம் ,
இது நிகழ கூடாதென்று , உயிர் கொடுத்து போராடினோம் !
கொழும்புவரை சென்று உடல் சிதறி ஒலித்து நின்றோம் !
எத்தினை பேர் கால் இழந்தோம் , எத்தினை பேர் கை இழந்தோம் !
வாழும் இள வயதில் அன்னை மண் காக்க என்று
பாழான விதி மேல பழி போட்டு போராட சென்றோம் !
பெற்ற அன்னை , குடும்பம் மறந்து போராளிகள் குடும்பம் கண்டோம் !
போர் களம் போகும் முன்னும் சிரித்து விளையாடி சென்றோம் !
சாவு என்பது எங்களுக்கு சகஜம் ஆகி போனது அறிவீர் !
மாவீரர் பலரை கண்டோம் , தியாகத்தின் எல்லையையும் கண்டோம் !
என்ன செய்ய இங்கே , கூண்டோடு பிடித்து விட்டான் !
அண்ணன்மார் எல்லாம் குத்தி குத்தி கேட்கின்றான் !
சகோதரிகள் நிலைமை வாயால் சொல்ல இயலவில்லை !
ரத்தம் மட்டும் இங்கே தரை எல்லாம் நனைக்கிறது !
எங்கள் அனைவரின் வழக்கையை இருபதிலும் முப்பதிலும்
முடித்து வைக்கிறான் சிங்களவன் !
தினமும் கதறல் காதை பிளக்கிறது! சித்திரவதை பலாத்காரம்
இரண்டும் ஒரே குரலில் , மனித உயிரின் இறுதி குரலாய் !
அடிக்கடி பயன்கள் பல எமை கொண்டே எரிகின்றான் !
யார் பிணமோ யாருக்கு திரியும் ஆனாலும் புண்ணியவான் !
இறந்து விட்டால் போதும் எனக்கு , அதுவே போதும் எனக்கு !
இதனை கேவலாமாய் அடிமையாய் நாம் ஆகி நிற்க ,
எமை மறந்து எதிரியுடன் , இந்த துரோகி கூட்டம் !
ஐயோ கடவுளே , இன்று கூட இவன் திருந்தலையே !
எங்களை கொன்று விடுங்கள் , தாய் மண்ணை உன்களை
விட ஒரு படி மேலே சென்று நேசித்ததை விட,
நங்கள் வேறு எந்த தவறும் செய்யவில்லை !
சிறையில் மடிய போகின்றோம் ! அது மட்டும் தெரிகிறது !
காட்டுக்குள் ஒரு சிறை , இங்கே கத்தினால் யாருக்கும் கேட்கும் ?
இறக்க தயார் நாங்கள் ! சயனைட் இருந்தால் தாருங்கள் !
அதை கூட சிங்களவன் விட்டு வைக்கவில்லை !
ஐயோ . இன்னொரு குரல் கத்தி கேட்கிறது !
இவன் உடலை எரிக்க நாளை யார் போவாரோ ?
Regards
Raj Suthan
"Lets voice for Tamil Freedom"
0 Kommentare:
Kommentar veröffentlichen