படித்து விடு மறந்து விடு
தமிழன் தமிழனாக இல்லை
இன்று கழகர்களாக இருக்கிறார்கள்
ஒன்று ஆட்சி கோமாளிகளின் பரணி பாட
இல்லை வீட்டில் அமர்ந்து வேடிக்கை பார்க்க
முன்பு பர்மா அகதி இன்று ஈழ அகதி
தமிழன் என்பதை விட அகதி என்பதே இவனுக்கு பொருத்தம்
இதில் எந்த எட்டப்பனுக்கும் இல்லை வருத்தம்
நாத்திகர் சபையில் பார்பனன் நாத்திகனாக மாறுவான்
தமிழன் இன்றும் சாதியைத்தான் தேடுவான்
நுனி முதல் அடிவரை பணம்
இதில் எப்படி பிழைக்கும் இவன் இனம்
ஈழத்திற்கு இவனுடைய பாரா முகம்
பண்பாட்டை மறந்தவனுக்கு இவன் சங்கமம்
ஊடகங்கள் இவன் நினைவுகளை மழுங்கடிக்கும் பேடகங்கள்
பத்திரிகைகள் இவன் மானத்தை பந்திபோடும் பன்னாடைகள்
உண்மை இவன் வாய் சொல்லில் வீரன்
தன்னலமற்றவர்கள் சிலர்
இவற்றை வேடிக்கை பார்பவர்கள் பலர்
ஈழம் பலரின் தீக்குளிப்பு
ஒருவன் மட்டும் ஒருமணிநேரம் உண்ணா நோன்பு முடிப்பு
நாத்திக வாதிகளின் மதியும் பணத்தால் கெடும்
தனிமனித துதியும் பாடும்
இவனுக்கு யார் வேண்டுமென்றாலும் அன்னை ஆகலாம்
அம்மாவாகலாம்
எவன் ஈழத்தை பேசினாலும் துரோகிஆகலாம்
ஈழத்தில் அந்நியனுக்கு கூட இருக்கும் மனித அக்கறை
இங்கே இவர்கள் கையில் படிந்தது ஈழத்தின் ரத்தகரை
ஈழத்தின் அழுகுரல் யாருக்கு வேண்டும்
இவன் மௌனமாக அழுவதை ஊர் பேசவேண்டும்
நல்லதொரு குடும்பம் ஒன்றுபட்ட கழகம்
மறதி இவன் பரம்பரை சொத்து
இவன்
சிவகுமார் பவானந்தம் சென்னை
0 Kommentare:
Kommentar veröffentlichen