உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை (07/03/2010) மாலை 5.30 மணிக்கு Progressive Film Club இன் ஏற்பாட்டில் My Daughter the Terrorist எனும் திரைப்படம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் அமைந்திருக்கும் New Theartre, No -43 East essex Street , Dublin - 2 இல் காண்பிக்கப்பட உள்ளது.
நோர்வே
படத் தயாரிப்பாளரான பீட்டிஆர்னஸ்ட் ( Beate Arnestad) இனால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் புலிப் போராளிகளின் வாழ்க்கை மற்றும் கொள்கையை ஆவணப்படுத்தியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு தமிழ்ச் சிறுமிகள் எவ்வாறு தமது வாழ்க்கைக் கனவுகள், கற்பனைகளைத் துறந்து தாம் போராட்டத்தில் இணைந்தோம் என்பதனையும் பின்னர் அவர்கள் எவ்வாறு தற்கொலை போராளியாக உருவாகின்றார்கள் என்பதனையும் அவர்களின் நோக்கம் என்ன என்பதனையும் தத்துரூபமாக எடுத்துக் காட்டுவதாக இந்தப்படம் அமைந்திருக்கின்றது.
தமிழ் மக்கள் எவ்வாறு இலங்கை அரசாங்கத்தினாலும் மற்றும் இலங்கை இராணுவத்தினராலும் அடக்கப்பட்டார்கள் என்பதனையும் மற்றும் ஏன் இந்த ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட்டது என்பதனையும் அயர்லாந்து வாழ் மக்களுக்கு தெளிவு படுத்தும் நோக்குடன் இத் திரைப்படம் காண்பிக்கப்பட உள்ளது. இந்த திரைப்படத்திற்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அயர்லாந்து தமிழர் அமைப்பினர் கேட்டுக்கொள்ளுகின்றனர்.
0 Kommentare:
Kommentar veröffentlichen