பின்நவினத்துவம் என்னும் பெயரில் புண்ணாக்கு வியாபாரிகள்! சாருநிவேதிதாவிடம் கவனமாக இருங்கள்.
நீண்டநாள் எதுவும் எழுதப்பிடிக்காமல் இருந்த என்னை நித்திரையில் இருந்து எழுப்பி இருக்கிறார் நித்தியானந்தசுவாமி. இன்னும் எத்தனை சுவாமிகள் நான் ‘யோகி’ என்று கிளம்பினாலும் பக்தர்கள் கூட்டம் குறையப்போவதில்லை இவன் இல்லைஎன்றால் இன்னொருவன் என்ற ரேஞ்சுல அடுத்த மடத்தை நோக்கி நம்மாளுக நகறப்போறாங்க அவ்வளவுதான். நித்தியானந்தம் இன்னும் கொஞ்சநாளைக்கு நம்மூரு புலனாய்வு பத்திரிகை மற்றும் தொலைகாட்சிகளுக்கு சரியான தீனி போடப்போகிறார் அவ்வளவே. இந்த செய்தி வெளியானதும் சில தீவிர இந்துமதபிரியர்கள் இந்துமதம் மாத்திரம் அப்படியா எல்லாமதங்களும் அப்படித்தான் இருக்கிறது என்று பிறமதத்தவர் மேல்பாய்கிறார்கள். நித்தியானந்தம் நடிகையோடு களவு வாழ்கை வந்தால் பாவம் பிறமதத்தவர்கள என்ன செய்வார்கள்? அவர்களா நித்தியானந்தத்திற்க்கு ஆசிரம் கட்டு என்று சொன்னார்கள்?.
இது ஒருபுறம் இருக்க தமிழக இலக்கிய உலகில் பின்நவினத்துவத்தின் பிதாமகன் என்று சொல்லப்படும் சாருநிவேதிதா நித்தியானந்தத்தொடு காட்டிய நெருக்கத்தை தொடர்ந்து பல்வேறு கேள்விக்கணைகள் சாரு மீது வீசப்பட்டிருக்கிறது. சாருவின் இணையத்தில் சிலமுறை உலவியபோழுது நித்தியானத்தத்தின் புகைப்படத்தை பார்த்திருக்கிறேன். வினவு அதற்க்கான ஆதாரத்தை வெளியிட்டு இருக்கிறது. பொறுமைகாருங்கள் நித்தியானந்தம் குறித்த கட்டுரை விரைவில் வெளியிடுகிறேன் என்று குறிப்பு வெளியிட்டு இருந்தார் சாருநிவேதிதா இன்று கட்டுரை வெளியிட்டு இருக்கிறார்.
சாரு குறித்து விமர்சனங்களை வினவு முன்வைத்து இருக்கிறது அந்த விமர்சனத்தின் உள்ளே போவதில் எனக்கு விருப்பமில்லை. வினவின் கட்டுரையில் இருப்பது எனக்கு ஒரு செய்தி அவ்வளவே அதில் விவாதிக்கும் அளவிற்கு எனக்கு அதுகுறித்த விடயங்களில் தெளிவில்லை. என்னை இந்த பதிவை எழுத தூண்டியவை எல்லாம் சாருநிவேதிதா எழுதிய சில எழுத்துக்களே.
நித்தியானந்தா என்ற சாமியார் மக்களுக்கு ஏன் அதிகம் தேவைப்பட்டார் என்ற காரணத்தின் முக்கிய அம்சம் நோய்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம் மற்றும் ஞானம் அடையலாம் என்ற மக்களின் எண்ணமே. ஞானம் அடைவது என்பது அந்தந்த மக்களின் எண்ணங்கள் சார்ந்தது ஆனால் நோய்களில் இருந்து தப்புவது?
சாருவின் எழுத்துக்கள் :
இப்போது நித்யானந்தரை விமர்சிக்கும் எல்லோரும் ஒரு விஷயத்தை விட்டு விடுகிறார்கள். அல்லது, அதைக் காணத் தவறுகிறார்கள். நித்யானந்தரிடம் ஒரு பெரும் சக்தி இருக்கிறது. அவரால் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்டவர்கள் பலரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். தன்னுடைய அளப்பரிய சக்தியை வைத்துக் கொண்டுதான் அவர் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் உருவாக்கிய நித்ய தியான் என்ற தியானத்தைச் செய்தால் நமக்கு எந்த ஆரோக்கியக் குறைவும் ஏற்படாது. அதற்குக் காரணம், அவர் அதையெல்லாம் உருவாக்கியது பதஞ்சலியின் யோக சூத்திரத்திலிருந்துதான்.
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
புற்றுநோயிலிருந்து தப்பித்து கொள்வது எளிதா என்று புற்றுநோய் பற்றி தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். எனது தாயார் கர்பப்பை புற்றுநோயினால் இரண்டாண்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். எங்கள் பகுதியில் கர்பப்பை புற்றுநோய் மரணங்களை அதிகம் பார்த்து இருக்கிறேன். சாரு என்னும் பொய்யர் சொல்வதுபோல புற்றுநோய் என்பது எவனோ டூபாக்கூர் சாமியார் கைநீட்டியதும் குணமாகிவிடும் சாதாரணநோய் அல்ல. வேலிக்கு ஓணான் சாட்சி என்பதைபோலே சிலருக்கு புற்றுநோய் குணமானதை அவரே பார்த்து இருப்பதாக கதை அளக்கிறார். இவரது வாசககண்மணிகளுக்கு கொஞ்சமாவது சிந்திக்கும் அறிவுத்திறன் இருக்கிறதா? என்று எண்ணத்தோன்றுகிறது. புற்றுநோயில் பலவகை இருக்கிறது கர்ப்பப்பை புற்றுநோய் கர்ப்பப்பையை விட்டு வெளியே பரவுவதற்கு முன்னால் அறுவைசிகிச்சை மூலம் கர்ப்பப்பையை நீக்குவதன் மூலம் நோயிலிருந்து தப்பித்து கொள்ளலாம். மாறாக எவனாது சக்தி மிகுந்தவன் ஆசீர்வதித்தான் என்று நோய் பரவாமல் இருக்காது.
புற்றுநோய் முப்பது விழுக்காட்டிற்கு மேல் பரவிவிட்டால் குணப்படுத்துவது மிகவும் கடினம் என்று என்னுடைய அம்மாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடமிருந்து தெரிந்து கொண்டேன். உடலில் ஒரு பகுதியில் செல்களின் அபரீத வளர்சியாலோ அல்லது இரத்தத்தில் அதிகமான வெள்ளையணுக்கள் உற்பத்தியாவதாலே உண்டாகும் நோயினை ஒரு சாமியார் சக்தியால் மாத்திரமே குணமாக்கிவிடுவார் என்று நம்புவது எவ்வளவு முட்டாள்தனம். இந்த எண்ணம்தான் பல நோயாளிகளை அலைக்கழிக்கிறது அறிவியலைவிட ஆன்மிகம் எந்தவித வலியும் இன்றி குணமாக்கிவிடும் என்று நம்பிக்கையை வளர்த்து மனதளவில் அறிவியல் சார்ந்த நம்பிக்கையை குறைத்து விடுகிறது. எனது அம்மாவின் சிகிச்சையின் போது இந்த கோவிலுக்கு போனால் சரியாகிவிடும் இந்த வேண்டுதலை நிறைவேற்றினால் நோய் குணமாகிவிடும் என்று சொல்லப்பட்டு வந்தது. எனது அம்மாவும் கோவிலுக்கு சொல்வதும் கண்ணீர்விட்டு பிரார்த்திப்பதுமாக இருந்தார்.
புற்றுநோயினை நித்தியானந்தன் குணப்படுத்த முடியும் என்றால் மாந்தர் சமூகத்திற்கு நித்தியானந்தனின் ‘கண்டுபிடிப்பு’(!?) மிகப்பெரிய கொடை. அந்த கண்டுபிடிப்பு என்னவென்று சொன்னால் அதன் மூலம் உலகையே நித்தியானந்தன் நோக்கி திருப்பி இருக்க முடியும். நித்தியானந்தன் எப்படி புற்றுநோயை குணப்படுத்தினார் என்று சாரு அறிவியல் பூர்வமாக பின்நவீனத்துவத்தின் உதவியுடன் விளக்கலாம். பின்நவீனத்துவ வாசகக்கண்மணிகளும் அந்த மாபெரும் கொடையை போற்றி விழாக்கள் எடுக்கலாம்.
சாரு அயோக்கியனா அல்லது முட்டாளா என்று எனக்கு புரியவேயில்லை.புற்றுநோயை ஒரு சாமியார் குணப்படுத்தினார் என்று சொல்ல கொஞ்சமும் வெட்கமாக இல்லை போலும் கேட்டால் அதுதான் பின்நவீனத்துவம் என்பார்கள். மது மாது கடவுளர்களை பெரிதும் நேசிப்பதாக வெட்கமில்லாமல் எழுதிகொள்வதனாலே அந்த தைரியம் வாய்த்திருக்கிறது போலும். மேலும் ‘நித்ய தியன்’ செய்தால் ஒரு ஆரோக்கியகுறையும் வராதாம் அந்த தியானத்தை கற்பித்த குருவுக்கே குவளை தண்ணீரோடு மாத்திரை எதற்க்காக தேவைப்பட்டது என்ற கேள்விக்கு சாருவிடம் பதில் கிடைக்குமா?
நித்தியானத்தைவிட சாரு மிகப்பெரிய கேடுகளை தனது எழுத்துக்கள் மூலம் செய்துகொண்டிருப்பதாகவே தெரிகிறது. நமது குறிக்கோள் எல்லாம் நித்தியானந்தத்தை அம்பலப்படுத்துவது மாத்திரம் அல்ல. இது போன்ற மோடிமஸ்தான்களை தேடி ஓடும் மக்களை தடுத்து நிறுத்துவதே. வலியில்லாமல் தனது நோய்க்கு மருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையே நோயாளியையும் நோயாளியின் குடும்பத்தினரையும் இது போன்ற சாமியார்களை தேடி ஓடச்செய்கிறது. இப்பொழுது விழித்து கொண்டேன் என்று சொல்லும் சாரு வேறு சாமியாரை தேடி சொல்லுங்கள் என்று சொல்கிறாரே தவிர சாமியார்களின் நமக்கு தேவை இல்லை என்பதை சொல்ல மறுக்கிறார்.
கிறித்துவர்கள் நடத்தும் குருடன் பார்க்கிறான் முடவன் நடக்கிறான் ஊமை பேசுகிறான் என்று அற்புதங்கள் நிகழ்த்தும் கூட்டங்களும். பில்லி சூன்யம் எடுக்கிறோம் என்றோ. பள்ளிவாசலின் வாயில் நின்று குழந்தைகளை மந்திரித்து செல்லும் பழக்கமும் கண்டிப்பாக கண்டிக்க வேண்டியதே! இந்துமதத்தை தீவிரமாக நேசிக்கும் சிலர் நித்தியானந்தம் செய்த தவறைவிட பிறமதத்தவர் முன்னால் இப்படி நடந்துவிட்டதே என்ற வேதனைதான் அதிகமாக இருக்கிறது. பிற மதத்தவர் என்ன ஒழுக்கமா? என்று கேள்வி கேட்டு திருப்தி அடைந்து கொள்கின்றனர். பெரியார் சொல்வார் மலத்தில் நெளியும் புழுவிற்கு பிற புழுக்களின் நாற்றம் குறித்து பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று.
சாரு ,ஜெயமோகன் போன்ற பின்நவினத்துவ பிழைப்புவாதிகள் எழுக்களை உண்மையான இலக்கியம் என்று நம்பி அவர்களின் எழுத்துநடையை நகலெடுக்கும் கூட்டம் கொஞ்சமேனும் சிந்தித்தால் நல்லது. சமூகத்து ஒருபயனும் இல்லாத குப்பைகளை எழுதி எழுதி எதை சாதிக்க போகிறீர்கள்? புற்றுநோயை வெறும் அருளாசி வழங்கலின் மூலம் குணப்படுத்திட முடியும் என்று எழுதுவது கூட தனது செம்மறியாட்டு கூட்டத்தினை சார்ந்த ரசிகர்களின் மீதுள்ள நம்பிக்கையினாலே என்பதை நாம் உணர்த்து கொள்ளவேண்டும்.
” மத நூல்களிலும் புராணங்களிலும்
அறிவியலை தேடுவது மலத்தில் அரிசியை பொறுக்குவதற்கு ஒப்பாகும் “
- தந்தை பெரியார்.
0 Kommentare:
Kommentar veröffentlichen