Montag, 15. März 2010

பிள்ளையானும், சம்பந்தனும் ஒரே அணியிலா?

பிள்ளையானுக்கும் இந்தியா உதவுவதால், பிள்ளையானும், சம்பந்தனும் ஒரே அணியிலா?


இலங்கையின் பொதுத் தேர்தலில் கிழக்கில் துணைப்படைக் குழுவை இயக்குபவரும்,

கிழக்கின் முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் குழுவும்

போட்டியிட இருக்கும் நிலையில், இந்தியா பிள்ளையானுக்கும் அவரது குழுவுக்கும்

உதவ முன்வந்திருப்பதாக, சிங்கள ஊடகவியலாளர்கள் இயக்கும் “லங்கா நியூஸ் வெப்”

என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது (இணைப்பு கீழே உள்ளது).

13வது திருத்த சட்டத்தின் அடிப்படையில் தாம் போட்டியிடுவதால், தமது கட்சிக்கு

இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர்

நிருபமா ராவ் கடந்த 8ஆம் நாள் தாஜ் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற சந்திப்பில்

தமக்கு உறுதியளித்திருப்பதாக, பிள்ளையானின் பேச்சாளர் அசாத் மெளலானா

கூறியிருக்கின்றார்.

1987ஆம் ஆண்டு முதல் 13வது திருத்த சட்டத்தில் இந்தியாவிற்கு நம்பிக்கை

இருந்தபோதும், தமிழ் அரசியல் தலைவர்கள் அதனைப் புறக்கணித்து வந்ததாகவும்,

சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிற்குக்கூட இது தொடர்பில் முழுமையான

விளக்கமற்ற நிலையே காணப்படுவதாகவும் நிருபாமா ராவ் கூறியதாகவும் அசாத் மேலும்

தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்புலத்தில் தாங்கள் தொடர்ந்தும் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை

என்பவற்றின் அடிப்படையிலேயே தேர்தலில் போட்டியிடுவதாகவும், இந்தியாவின்

உதவியுடன் தமிழ் மக்களிற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் கூறும்

சம்பந்தன் அணிக்கு, பிள்ளையான் குழு வெளியிட்டுள்ள செய்தி பகரும் விடை என்ன

என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற கோட்பாட்டையா? 13வது திருத்த

சட்டத்தையா இந்தியா ஏற்கின்றது என்பது பற்றி இந்தியா இதுவரை பகிரங்கமாக

எதனையும் அறிவிக்காத காரணத்தினால், இந்தியாவை முழுமையாக நம்பி தமிழ்த் தேசியக்

கூட்டமைப்பின் தலைமை களத்தில் இறங்கியிருப்பது பற்றி பல்வேறு விமர்சனங்கள்

முன்வைக்கப்படுவதுடன், விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் கூட்டமைப்பின் தலைமை

இந்தியாவின் கைப்பொம்மையாக செயற்பட தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

http://www.lankanewsweb.com/news/EN_2010_03_15_004.html
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen