
ஈழத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடித்தீர்வு காணப்படவேண்டும் என்று தமிழகத்தில் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலைச்சிறுத்ததைகள் கட்சியின் உழைக்கும் மகளீர் உரிமை மாநாடு தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. பன்நாட்டு மகளீர் நாளான நேற்று தமிழகத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் உழைக்கும் மகளீர் அணியினர் உரிமை மாநாடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு உரைநிகழ்த்தியுள்ளார். ஈழத்தில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் விடுதலையினையும் மற்றும் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக இந்திய அரசு உடன் நடவடிக்கை எடுத்து தமிழ் மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று திருமாவளவன் அவர்களின் கருத்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலதிக செய்திகளுக்காக
0 Kommentare:
Kommentar veröffentlichen