Sonntag, 7. März 2010

இன்று தேசியத்தலைவரின் தாயார் இலங்கையிலிருந்து வெளிநாடு பயணம்

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் இன்று, கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து வெளிநாடு ஒன்றுக்கு பயணமாகியுள்ளார்.


இதேவேளை தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் இன்று இலங்கையில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு பயணமாகியுள்ளார். கடந்த 2ம் திகதி திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக திரு.சிவாஜிலிங்கம் அவர்களால் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு பம்பலப்பிட்டி வெஸ்ரன் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

சுகயீனம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், அத்தோடு அவரின் பிள்ளைகள் இந்தியா, டென்மார்க் மற்றும் கனடாவில் வசிப்பதாலும் அவர் இலங்கையில் இருந்து பயணமாகியுள்ளார்.

இவரின் பயண ஒழுங்குகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமாகிய திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் ஒழுங்கு செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen