இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 8ம் தேதி நடக்க உள்ளது. அதில் வேட்பாளர்கள் பயன்படுத்துவதற்கென அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. இதனையடுத்து வேட்பாளர்கள் தங்கள் சின்னங்களை தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக, பிராணிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள், வாகனங்கள் உள்பட பல சின்னங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மான், நாய், மாம்பழம், பலாப் பழம், கிளி, அணில், பாம்பு, காண்டாமிருகம், ஜீப், கிணறு, கட்டில், சுத்தியல், கம்ப்யூட்டர், பட்டம், அஞ்சல் பெட்டி போன்றவை அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களுள் அடங்கும்.
225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு வரும் ஏப்ரல் 8ம் தேதி நடக்கும் தேர்தலின் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஏப்ரல் 22ம் தேதியன்று புதிய நாடாளுமன்றம் கூடுகிறது.
RSS Feed
Twitter



Montag, März 01, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen