Donnerstag, 25. Februar 2010

இடம்பெயர்ந்த தமிழர்களின் ஈழக் கோரிக்கை பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர வாய்ப்பு - ICF

பயங்கரவாத தடை சட்டத்தை அரசாங்கம் மேலும் தொடருவதற்கு இடம்பெயர்ந்து வெளிநாடுகளின் வாழும் தமிழர்களினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் ஈழக் கோரிக்கையை காரணம் காட்டலாம் எனவும் இதையே அரசாங்கம் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் எனவும் இண்டர்நெசனல் கிரைசீஸ் அமைப்பு கூறியுள்ளது.




ஈழக் கோரிக்கையை தொடர்வதையே காரணம் காட்டி இலங்கயில் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் தொடர்ந்து நீடிப்பதற்கு அதிக சந்தர்ப்பம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் அவர்கள் அமைதியாக இக்கோரிக்கைகளை தொடரலாம் எனவும் அதற்கான உரிமை இருப்பதாகவும் பிரஸல்ஸை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இன்டர்நெசனல் க்ரைசீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.



யுத்தத்தின் பின்னர் புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டதனால் அரசாங்கம் இலங்கைப் புலம்பெயர் தமிழர்கள் என்ற தலைப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாட்டின் அபிவிருத்திக்காக புலம்பெயர் மக்களின் நிதியை பயன்படுத்த முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது. புலிகள் சார்பாக இயங்கிய அமைப்புக்கள் பலமிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.



மேலும் புலி ஆதரவு கொள்கையை கைவிட்டாலே சமாதான நடவடிக்கைக்கு உதவ முடியுமெனவும் , அரசாங்கம் தீர்வுகளையும் வழங்க வேண்டும் எனவும் இறுதிகட்ட போர் தொடர்பான நியாயமான விசாரணைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் இன்டர்நெசனல் க்ரைசீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen