இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா, தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். ஆட்சியை கவிழ்க்க சதி, மற்றும் பல ராணுவ குற்றச்சாட்டுகள் அவர் மீது கூறப்பட்டுள்ளது.
இதனால் அவர் மீது ராணுவ கோர்ட்டில் விசாரணை நடக்க இருக்கிறது. இதற்கிடையில் ஏப்ரல் 8-ந் தேதி நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் பொன்சேகா போட்டியிடுகிறார்.
இந்நிலையில், பொன்சேகா மீது சிவில் கோர்ட்டில் இன்னும் 2 வாரத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று இலங்கை மந்திரி ஜி.எல்.பெரீஸ் கூறியுள்ளார்.
ஊழல், மோசடி, சதி, ராணுவத்தில் குழப்பம் ஏற்படுத்துதல், ராணுவத்தில் இருந்து வெளியேறியவர்களுக்கு ஆதரவு அளித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட இருக்கிறது
RSS Feed
Twitter



Donnerstag, Februar 25, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen