Sonntag, 21. Februar 2010

தமிழ் ஈழம் சாத்தியம் எப்போது? படியுங்கள்

அன்பான


உறவுகளே!

தமிழ்

ஈழம் சாத்தியம் எப்போது? படியுங்கள்.





தமிழீழத்தைப் பெற முடியுமா?

திகதி: 20.02.2010 // தமிழீழம்

அன்புடையீர்,


நாம் தெளிவாகச் சிந்தித்து அதன் அடிப்படையில் செயலாற்றும் காலம் வந்துள்ளது. நமக்கு என்ன வேண்டும்?


தமிழீழம். அதைவிடக் குறைவான எதுவும் வேண்டாம்.



தமிழீழத்தைப் பெற முடியுமா?


நிச்சயமாக நம்மால் முடியும். நிச்சயமாக நம்மால் முடியும்.





எந்த நம்பிக்கையில் அப்படிச் சொல்கிறீர்கள்?


யூதர்களிடம் இருந்துபடிப்பினை தான் ! முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட பின்னர், அவர்களது மொழி கிட்டத்தட்ட வழக்கற்றுப் போகும் தருவாயில் இருந்த போதும் அவர்கள் சாம்பல் மேட்டில் இருந்து எழுந்த பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் எழுந்தார்கள்!


நாம் என்ன செய்ய வேண்டும்?


யூதர்களின் வரலாற்றைப் படிப்போம் ! அது எந்தப் பதிப்பாக இருந்தாலும் பரவாயில்லை. அவை ஒரேமாதரியான வரலாற்றைத்தான் சொல்கின்றன. ஒருமுறை படித்து முடித்த பின்னர் செயலில் இறங்குங்கள்!

நாம் யூதர்களாக முடியுமா?



நம்மிடம் ஒற்றுமையில்லையே !


நாம் யூதர்களைப் போல் வரவேண்டும். அவர்கள் அய்க்கியமாக இருந்தார்கள் என்று யார் சொன்னது?


நாம் வேறு வேறு நாடுகளில் வாழும் 7 கோடி மக்கள். நம்மிடம் எல்லா வளமும் இருக்கின்றன. நான் என்ன செய்ய வேண்டும்?



வீண் பேச்சுப் பேசுவதையும் எதிர்மறையாகப் பேசுவதையும் சிந்திப்பதையும் நிறுத்த வேண்டும். உங்களிடமும் மற்றவர்களிடமும் நம்பிக்கையை ஊட்டுங்கள்! இலக்கில் கண் வையுங்கள். ஆனால் அந்த இலக்கை அடைவதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிகளை உருவாக்குங்கள்! பாதைகள் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் நமது இலக்குத் தவறக்கூடாது.


பிரான்சுதமிழீழமக்கள்பேரவை , ஐரோப்பியதமிழ்மக்கள்அவை , அமெரிக்க தமிழர்களின் அரசியல் செயல் அவை, உலகளாவியதமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் அவை, கனடிய தமிழர் பேரவை, பேர்ல் உள்ள அமைப்புக்கள் மற்றும் உள்ளுர் அமைப்புக்களை ஆதரியுங்கள். செயல் செய்யுங்கள், எண்ணங்களை, நேரம் மற்றும் வளங்களைவழங்குங்கள்.


புறக்கணிப்பு, ஆதரவுதேடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.


எல்லோரும் அழைத்து நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கத் தொடங்கினால் நாம் வெற்றி பெறுவோம்! அழைப்புக்கு நீங்கள் காத்திருந்தால் நாம் வெற்றியடைய மாட்டோம்! ஓரு நாளில்ஒரு மணி நேரத்தையாவது செலவிடுங்கள்! எதைக் கொடுப்பது என்பதை நீங்கள் தீர்மானியுங்கள்.


மழையாகட்டும் வெய்யிலாகட்டும் தொடர்ந்து பங்களிப்புச் செய்யுங்கள்.


இதைச் சொல்வதற்கு நான் யார்?


நான் உங்களுக்குச் சொல்ல வில்லை !


நான் எனக்குச் சொல்லிக்கொள்கிறேன்.


ஒவ்வொரு நாளும் அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்!



அவ்வளவுதான்!



அடுத்த ஆண்டு நிச்சயம் சுதந்திர தமிழீழத்தில்!





நன்றி
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen