தமிழீழ தேசத்தின் விடிவிற்காக தங்கள் உயரிய உயிர்களை அர்ப்பணித்துவிட்ட மாவீரர்கள் என்றும் தமிழ் நெஞ்சங்களில் வைத்து வணங்கப்படவேண்டியவர்கள்.
இன்று சிறீலங்கா தனது கோர முகத்தைக் காட்டி இந்த மாவீரர்களின் துயிலும் இல்லங்களை அழித்தபோதும் தமிழ் மனங்களில் இருந்தும் வரலாற்றின் பதிவுகளில் இருந்தும் மாவீரச் செல்வங்களை என்றுமே அழித்துவிடமுடியாது.
அழித்துவிட முடியாத அந்த மாவீரர்களின் வரலாறுகளை, நினைவுகளை ஒரு பெரும் வரலாற்றுப் பதிவாக்கும் முயற்சியில் சங்கதி இணையத்தளம் இறங்கியுள்ளது. அந்தப் பெரும் பணிக்கும் வாசகர்களிடம் இருந்து உதவியைக் கோருகின்றோம்.
மாவீரர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆக்கங்கள், அவர்களின் நிழற்படங்கள், தரவுகள் எதுவாக இருந்தாலும் எமக்கு அனுப்பி வையுங்கள். நீங்கள் அனுப்பி வைப்பவை ஒரு வரலாற்றின் ஆவணத்தேவைக்கு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
எனவே, மாவீரர் குறித்த சிறு தகவல்களும் பெரும் பயனுள்ளவையாக இருக்கும்.
நீங்கள் அனுப்பும் மாவீரர்கள் சம்பந்தமான விடயங்களுக்கு maverarkal@googlemail.com எனும் மின்னஞ்சல் முகவரியை மட்டும் பாவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
RSS Feed
Twitter



Sonntag, Februar 21, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen