கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு திடீரென நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நாம் அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,
"இதுவரை எனது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளனர். எனினும் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. எனது பாதுகாப்புக்காக பொலிஸார் ஈடுபடுத்தப்படும் நோக்கிலேயே இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட்டனர். எனினும் இதுதொடர்பில் உத்தியோகபூர்வமாக எனக்கு அறிவிக்கப்படவில்லை" எனத் தெரிவித்தார்.
எவ்வித முன்னறிவிப்புமின்றி முதலமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டமை தொடர்பாக மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபருக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அவருக்கு இதுவரையில் 40 இராணுவ வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வந்தனர்.எனினும், இன்று காலை இராணுவ வீரர்கள் முழுமையாக அகற்றப்பட்டு, ஆறு பொலிஸார் மாத்திரம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனித்து போட்டியிட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தீர்மானித்ததுடன் முதல் முறையாக வட மாகாணாத்திலும் அந்த கட்சி போட்டியிடுகிறமை குறிப்பிடத்தக்கது.
RSS Feed
Twitter



Freitag, Februar 26, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen