2010ஆம் ஆண்டு புதிய ஆண்டாக இன்று மலர்ந்துள்ளது. கடந்த ஆண்டுகள் தமிழ் மக்களின் வாழ்வில் இரத்தக் கறைபடிந்த ஆண்டுகளாகும்.
சிங்களப் பேரினவாத அரசின் மாறாத வடுவினை தாங்கிய ஆண்டுகளாக காணப்பட்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மாற்றத்திற்கமைவாக மலர்ந்துள்ள புத்தாண்டில் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழ தனியரசினை பெற்றுக்கொடுக்கும் ஆண்டாக மாற புலத்தில் உள்ள தமிழர்கள் தொடர்ந்தும் உழைக்க வேண்டுகின்றோம்.
வல்லாதிக்க சக்திகளின் துணைகொண்டு சிறீலங்கா அரசும் அதன்பேரினவாதிகளும் முப்பது ஆண்டுக்கு மேலான தமிழீழ விடுதலைப் போரினை முடிவுகட்டும் நோக்கில் எடுத்த நடவடிக்கைகள் ஈழவிடுதலையை இலக்காகக் கொண்டு பன்நாடுகளில் கொழுந்து விட்டுஎரிகின்றசிங்களப் பேரினவாத அரசும் அதன் கைக்கூலிகளும் ஏற்படுத்திய வடுக்கள் என்றும் தமிழ் மக்களின் மனங்களைவிட்டு அகலாதவை. தமிழ் மக்களுக்கு துன்பத்தையும் துயரத்தையும் கொடுத்த சிங்கள பேரினவாதம், மக்களை முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துகொண்டு சுடுகுழல் முன்னே வதைக்கின்றது. என்றும் மாறத நினைவுகளுடனும் வடுக்களுடனும் தாயக மக்கள் வாழ்கின்றார்கள்.
ஆண்டுகள்தான் மாறுகின்றது. இன்னும் தமிழ் மக்களின் வாழ்வில் மற்றாங்கள் ஏற்பட்டதாக இல்லை. சிங்கள மக்கள் புத்தாண்டினை சொந்த வீடுகளில் சொந்த பந்தங்களுடன் சிறப்புற கொண்டாட, தமிழ் மக்களோ வீடுவாசல்கள் இன்றி உறவுகளைப் பிரிந்து உடல் உறுப்புக்களை இழந்த நிலையில் சிங்களத்தின் சிறைக்குள் வாழ்கின்றார்கள்.
தமிழ் மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக மலர்ந்துள்ள இப்புத்தாண்டு அமையவேண்டும் என்றும், பன்நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் திடசங்கற்பம் பூணவேண்டும் என்றும் புத்தாண்டு தெரிவித்த வாழ்த்துக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RSS Feed
Twitter



Freitag, Januar 01, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen