Samstag, 5. Dezember 2009

புலிகளின் பணம் எதுவும் இல்லை - கை விரித்தது சுவிஸ் வங்கி

சிறிலங்காவினால் கைது செய்யப்பட்டு, கொழும்பு இராணுவச்சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், கே.பி.யின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குக்களை அரச உடமையாக சுவீகரிக்க, எடுத்த முயற்சி தோல்வியடைந்திருப்பதாகச் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் அறிகையில், சர்வதேச இணக்கச் சபையிடம் சிறிலங்கா அரசாங்கம் விடுத்த கோரிக்கை மற்றும், சுவிஸ் வங்கியிடம் விடப்பட்ட கோரிக்கை என்பன நிராகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.




கே.பி.யின் சொத்துக்கள் குறித்து, அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அவரது உண்மை தன்மை, சொத்துக்களின் வர்த்தகப் பதிவு என்பனவற்றின் அடிப்படையில், அந்தச் சொத்துக்களை ஒருநாட்டிற்குரிய சொத்து எனத் தீர்மானிக்க முடியாதெனச் சொல்லியே இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.



இதுபோன்றே சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்ள சிறிலங்கா அரசு விடுத்த கோரிக்கையும் சுவிஸ் வங்கியினால் நிராகரிக்கப்பட்டள்ளது. கே.பி.யின் பெயரில் எவ்வித வங்கிக் கணக்கும் சுவிஸ் வங்கியில் இல்லை, ஆனால் விடுதலைப்புலிகள் தமது பணத்தை வேறு பெயர்களில் வைப்பிலிட்டிருந்தால் அது குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனவும் சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளதாகவும் அச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen