சிறீலங்கா அரசு தமிழ் மக்களை இனப்படுகொலை புரிந்தபோது மேற்கொண்ட போரியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் மாதம் அயர்லாந்தில் நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த விசாரணைகளின் போது பல்வேறு நாடுகளையும் சேர்ந்த மனித உரிமை குழுக்கள் மற்றும் சாட்சிகள் சமூகமளித்து தமது கருத்துக்களை கூறமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறீலங்கா அரசினாலும், அதன் படையினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போரியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் மாதம் அயர்லாந்தின் தலைநகர் டப்பிளினில் நடைபெறவுள்ளது.
ஜனவரி மாதம் 14 மற்றும் 15 ஆம் நாட்களில் நடைபெறவுள்ள இந்த விசாரணைகளில் சிறீலங்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றை சேர்ந்த மனித உரிமை அமைப்புக்கள், சட்டவியல் அமைப்புக்கள், தனிப்பட்ட நபர்கள் போன்றவர்கள் சட்சியமளிக்க முடியும்.
இந்த விசாரணைகளின் முதல்கட்ட முடிவுகள் ஜனவரி 16 ஆம் நாள் வெளியிடப்படும். விசாரணைகளில் பங்குபற்றும் பொருட்டு ஓய்வுபெற்ற டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ராஜின்டர் சாச்சர் டப்பிளின் செல்லவுள்ளார்.
நோர்வேயின் அமைதி முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன? என்பது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும், சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மக்கள் எம்முன் சாட்சியமளிக்க முடியும் எனவும் ராஜின்டர் தெரிவித்துள்ளார். இந்த விசாரணகளை 11 பேர் கொண்ட விசாரணைக்குழு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
RSS Feed
Twitter



Samstag, Dezember 05, 2009
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen