வெள்ளை கொடிகளுடன் சரணடையுமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சக செயலாளர் பாலித கோகன்னாவே விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்களிடம் தெரிவித்தவர் என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
போர் இறுதிக்கட்டத்தை அடைந்த சமயம் பாலித கோகன்னா சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பணியாற்றியிருந்தார்.
விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் திரு பா. நடேசன், சமாதான செயலக பணிப்பாளர் சி. புலித்தேவன், கட்டளை தளபதி ரமேஸ் ஆகியோர் சரணடைய விரும்பிய போது அவர்களை வெள்ளை கொடிகளை ஏந்தியவாறு வருமாறு கோகன்னா தெரிவி;திருந்தார்.
கடந்த மே மாதம் 21 ஆம் நாள் பிரான்ஸ் நாட்டு ஏ.எஃப்ஃபி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் வெள்ளை கொடிகளுடன் விடுதலைப்புலிகளை சரணடையுமாறு தான் கூறியதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால் சரணடைய முயன்றவர்களை விடுதலைப்புலிகள் பின்னால் இருந்து சுட்டுவிட்டதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
ஆனால் கோகன்னாவின் இந்த குற்ச்சாட்டை மறுத்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள் சிறீலங்கா அரசு ஜெனீவா சட்டவிதிகளை மிகவும் பாரதூரமாக மீறியுள்ளதாக தெரிவித்துள்ளன.
இதனிடையே அரசின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நடேசனும், புலித்தேவனும் வெளிளைக்கொடிகளுடன் 58 ஆவது படையணியினரை நோக்கி சென்ற போது அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பிரதிநிதி செல்வராஜா பத்மநாதன் முன்னர் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Kommentare:
Kommentar veröffentlichen