எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு, மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்உ செய்தி வெளியிட்டுள்ளது.இதற்கான உத்தியோக பூர்வ அறிவிப்பினையும், ஜனவரி மாதம் இரண்டாம் மூன்றாம் வாரங்களில் ஜனாதிபதி அறிவிக்கலாம் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணையாளத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டதாகவும், தேர்தல் காலத்தில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு எந்தவித சட்ட சிக்கலும் கிடையாது என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளதாகவும், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு போதியளவு கால அவகாசம் வழங்ககூடிய வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் எனவும் ஊகங்கள் எழுந்துள்ளன.
0 Kommentare:
Kommentar veröffentlichen