Dienstag, 15. Dezember 2009

நாசாவின் வைஸ் செய்மதி விண்ணில் செலுத்தப்பட்டது


அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள சண்டா பார்பரா எனும் இடத்திலிருக்கும் வாண்டென்பெர்க் விமான ஏவுதளத்திலிருந்து நேற்று டெல்டா 2 எனும் ராக்கெட் மூலம் மிக முக்கியமான செய்மதி ஒன்று விண்ணில் செலுத்தப்பட்டது. மிகப்பரந்த வெளியை அவதானிக்கும் அகச்சிவப்புக் கதிர் வீச்சு புள்ளி விபரி எனப் பொருள்படும் படி வைஸ்(WISE- wide field infrared survey explorer) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த செய்மதி பூமியின் துருவப்பகுதிகளைச் சுற்றி வந்த வண்ணம் 360 பாகையிலும் விண்வெளியை முழுவீச்சுடன் அவதானித்து விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகள் பற்றி ஆராயவுள்ளது.




பூமியிலிருந்து 525km உயரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வைஸ் இனி வரும் ஒன்பது மாதங்களுக்கு அகச்சிவப்புக் கதிர்களால் தூரத்தே இருக்கும் காலக்ஸிகளைப் படம் பிடித்து மில்லியன் கணக்கில் புகைப்படங்களை அனுப்பவுள்ளதுடன் இனிவரும் காலங்களில் பூமிக்கு விண் பொருட்களால் ஏற்படவிருக்கும் ஆபத்தையும் முன்கூட்டியே அறிவிக்கவுள்ளது. டிசம்பர் 11ம் திகதியே விண்ணுக்கு செலுத்தப்படவிருந்த வைஸ் செய்மதி டெல்டா 2 ராக்கெட்டின் பூஸ்டர் எஞ்சினில் செய்யப்பட வேண்டியிருந்த சிறிய திருத்தம் காரணமாக பின் தள்ளிப் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen