Dienstag, 15. Dezember 2009

சரணடைவதைக் கண்காணிக்க ஐ.நா அழைக்கப்பட்டது - ஹோல்ம்ஸ்

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் நேற்றையதினம் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வன்னிப்போரின் இறுதிக்கட்டத்தின்போது புலித்தலைவர்கள் சரணடைவதைக் கண்காணிக்கும் சந்தர்ப்பம் ஐக்கிய நாடுகளிடன் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளார். ஆனால் போதிய நேரம் இல்லாத காரணத்தால் அவர்கள் சரணடையும் தளத்துக்கு செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.




புலிகள் தலைவர்கள் சிலர் தாம் சரணடைவது குறித்து ஐக்கிய நாடுகளின் பொருத்தமான அதிகாரிகளிடம் அவர்கள் தொடர்புகொண்டு அறிவித்திருந்ததை ஹோல்ம்ஸ் உறுதிசெய்துள்ளார். ஆனால் இறுதி நேர யுத்தம் மிக வேகமாக நடந்துமுடிந்ததால் ஐ.நா இதில் தலையிடுவதற்கான போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்றுள்ளார்.

  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen