Dienstag, 22. Dezember 2009

பிரபாகரன் தப்பிச் செல்லவிருந்த கப்பலே கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாம்.


கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட கப்பலே வன்னியிலிருந்து பிரபாகரன் தப்பிச் செல்வதற்குப் பாவிக்கவிருந்த கப்பலாம்.




போர் உச்சக்கட்டத்திலிருந்த போது, பிரபாகரனை வன்னியிலிருந்து தப்பவைப்பதற்கு திட்ட மிட்ட புலிகள், பிறின்ஸஸ் கிறிஸன்டா கப்பலுக்கே முதலில் கொண்டு செல்லவிருந்ததாவும், பின்னர் அதிலிருந்து ஹெலிகாப்டர் மூலம், வேறிடத்திற்கு அழைத்துச் செல்லவிருந்ததாகவும், சிறிலங்கா கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க தெரிவித்துள்ளார்.



கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட விடுதலைப்புலிகளின் கப்பலை கொழும்பிலுள்ள ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்று காட்டய போதே, கடற்படை தளபதி ஊடகவியலாளர்களுக்கு மேற்கண்டவாறு கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலில் சிறியரக உலங்குவானூர்த்தி இறங்கும் வசதியுள்ளது. இந் வசதியைப் பாவித்து, போரின் இறுதிக்காலத்தில், விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு, தமது தலைவரை காப்பாற்றுவதற்காக இந்த கப்பலை முல்லைத்தீவு கடலுக்கு அனுப்பியிருந்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen